‘என்னது போஸ்ட் புரொடக்ஷனுக்கு ஆட்கள் தேவையா?’ - ‘ஜவான்’ படக்குழுவின் புதிய போஸ்டரால் குழம்பிய ரசிகர்கள்!

படம் வெளியாக இன்னும் 2 மாதங்களுக்கும் குறைவான நாட்களே உள்ளது.
ஜவான்
ஜவான்ட்விட்டர்

‘ராஜா ராணி’, ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ ஆகியப் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் அட்லீ, 5-வது படமாக ‘ஜவான்’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் அட்லீ பாலிவுட்டில் அறிமுகமாகிறார். ‘ஜவான்’ படத்தில் நடிகர் ஷாருக்கான் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.

அட்லீ, ஷாருக்கான்,
அட்லீ, ஷாருக்கான்,ட்விட்டர்

மேலும், இந்தப் படத்தில் நயன்தாரா, ப்ரியாமணி, கௌரவ வேடத்தில் தீபிகா படுகோனே, வில்லனாக விஜய் சேதுபதி, யோகிபாபு, சான்யா மல்ஹோத்ரா, சுனில் குரோவர் உள்ளிட்ட பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறது. ஹைதராபாத், சென்னையை தொடர்ந்து மும்பையில் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தை, ஷாருக்கான் மற்றும் அவரது மனைவி கௌரிகான் ஆகியோரின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லிஸ் எண்டெர்டெயிண்மெண்ட் தயாரித்து வருகிறது. வரும் ஜூன் 2-ம் தேதி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ‘ஜவான்’ படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணியான வி.எஃப்.எக்ஸின் சிலப் பகுதிகளுக்கு ஆட்கள் தேவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், திட்டமிட்டப்படி ஜூன் 2-ம் தேதி படம் வெளியாகுமா என்று ட்விட்டரில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். சிலர் புது போஸ்டர் நன்றாக இருக்கிறது என்றும், இன்டடெர்ன்ஷிப் ஆக இருக்குமோ என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஜவான்
”அன்புள்ள ராக்ஸ்டார்! பிரியாவிடை” - உடல்நலக்குறைவால் உயிரிழந்த பாடகி ரமணியம்மாள் - பாடகர் ஸ்ரீநிவாஸ் உருக்கம்!
ஜவான்
“அன்று தோனி விளையாடுவதை நிறுத்தியதால்தான் இன்று ரிஷப் பந்த்..” - இளம் வீரர்களுக்கு கங்குலி அறிவுரை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com