நடிகர் அஜித்திற்கு என்ன ஆச்சு? அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ஏன்?

விடாமுயற்சி படப்பிடிப்பு பணிகள் நடந்து வரும் நிலையில், நடிகர் அஜித் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் எதற்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார் என்பதை முழுமையாக பார்க்கலாம்.
ajith
ajithpt

மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துவரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட ஷூட்டிங் முடிந்துவிட்ட நிலையில் படக்குழுவினர் இரண்டாம் கட்ட ஷூட்டிங்கிற்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. படத்திற்கு, ராக்ஸ்டார் அனிரூத் இசையமைக்க த்ரிஷா, அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். எமோஷன் கலந்த ஆக்‌ஷன் படமாக விடாமுயற்சி உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, நடிகர் அஜித் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி, இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

எதற்காக அஜித் மருத்துவமனைக்கு சென்றுள்ளார் என்று விசாரித்தபோது வழக்கமான பரிசோதனைக்கானவே நடிகர் அஜித் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

ajith
’எஞ்சாயி எஞ்சாமி’ பாடல்: ‘ஒரு பைசாகூடக் கிடைக்கவில்லை’ - சந்தோஷ் நாராயணன் விளக்கம்!

இதுகுறித்து நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திராவிடம் கேட்டபோது,

விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் ஷெட்டியூல் முடிந்திருக்கும் நிலையில், செகண்ட் ஷெட்டியூல் வருகின்ற 15ம் தேதி அஜர்பைஜானில் தொடங்க இருக்கிறது. படத்தின் படப்பிடிப்புகாக அஜித் அஜர்பைஜான் கிளம்ப இருக்கிறார். இதற்கான ரெகுலர் செக்கப்பிற்காக அப்போலோ மருத்துவமனைக்கு இன்று சென்று இருக்கிறார். மற்றபடி அவரின் உடல்நலம் நன்றாகவே உள்ளது. ஓரிரு நாட்களில் மருத்துவமனையில் இருந்து திரும்புவார்” என்று தெரிவித்துள்ளார்.

ajith
முதலும் கடைசியுமாக ‘குணா’ - நடிகை ரோஷினி நடிப்பில் இருந்து வெளியேற காரணம் என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com