48 மணிநேரம் கெடு... மிரட்டல் விடுத்தவர்களுக்கு பாடகி கெனிஷா வெளியிட்ட அறிவிப்பு!
நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெறுவதாக அறிவித்துள்ளனர். இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நடிகர் ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா ஒரு திருமண நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொண்டனர். அதிலிருந்து பல சர்ச்சைகளை வெடிக்க தொடங்கியது.
ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ரவி இருவரும் சமூக வலைதளங்களில் மாறி மாறி அறிக்கை வெளியிட ஆரம்பித்தனர். சமீபத்தில், நீதிமன்றமும் இருவருக்கும் இடையிலான பிரச்சனை குறித்து இனி சமூக வலைதளங்களில் அறிக்கை விடக்கூடாது என்று ரவி மோகன் மற்றும் ஆர்த்திக்கு உத்தரவிட்டிருந்தது.
இருவரின் பிரிவிற்கு கெனிஷாதான் காரணம் என்று சமூக வலைதளங்களில் பரபரப்பு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால், ரவி மோகன் , ஆர்த்தி விவாகரத்து விஷயத்திற்கும் தனக்கும் தொடர்பு இல்லை என தொடர்ந்து கூறி வருகிறார் கெனிஷா. உண்மை நிச்சயம் வெளியே வரும். அன்று உங்களுக்கு தெரியும் என்கிறார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக பாடகி கெனிஷாவிற்கு, பாலியல் மிரட்டல், ஆபாச பேச்சு, கொலை மிரட்டல் வருவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், இந்த மிரட்டல்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, பாடகி கெனிஷா வக்கீல் நோட்டீஸ் வெளியிட்டுள்ளார்.
அதாவது தன்னை பற்றி வெளியான செய்திகள், வீடியோக்கள், மோசமான கமெண்ட்டுகள், மோசமான புகைப்படங்கள் ஆகியவற்றை 48 மணிநேரத்திற்குள் நீக்க வேண்டும். இல்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கெனிஷா சார்பில் அவரின் வழக்கறிஞர் எச்சரித்திருக்கிறார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரவிமோகன் விவகாரம் தொடர்பாக யூடியூப், இன்ஸ்டா, பேஸ்புக், எக்ஸ் உள்ளிட்ட தளங்களில் தன்னை பற்றிய அவதூறுகளை அனுமதிக்கக் கூடாது என்றும் பாலியல் வல்லுறவு மிரட்டல் மற்றும் கொலை மிரட்டல் விடுவோரின் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.