ரவீனா டாண்டன்
ரவீனா டாண்டன்web

தென்னிந்திய திரைப்படங்கள் கலாசாரத்தில் வேரூன்றியவை - ரவீனா டாண்டன்

தென்னிந்திய திரைப்படங்கள், கலாசாரத்திலும் பாரம்பரியத்திலும் வேரூன்றியவை என்று நடிகை ரவீனா டாண்டன் கூறியுள்ளார்.
Published on

2021இல் வெளியான ஆளவந்தான் படத்தில் நடித்த ரவீனா, விஜய் ஆண்டனியின் ‘லாயர்’ திரைப்படத்தின் மூலம் கிட்டத்தட்ட 24 ஆண்டு இடைவெளிக்குப் பின் தமிழில் நடிக்கிறார்.

ரவீனா டாண்டன்
’கட்டப்பா பாகுபலியைக் கொல்லவில்லை என்றால்..?’ 10 ஆண்டுக்கு பின் இணையத்தை கலக்கிய ராணா டகுபதி!

தென்னிந்திய திரைப்படங்கள் கலாசாரத்தில் வேரூன்றியவை!

தென்னிந்திய சினிமாவில் நடிப்பது குறித்து முன்னணி ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் பேசியிருக்கும் அவர், தென்னிந்திய திரைப்படங்களில் நடிப்பதை தான் எப்போதும் விரும்புகிறேன். பாலிவுட்டில் ஒரு படம் எடுக்கப்படும் நேரத்தில் தென்னிந்தியாவில் இரண்டு படங்களை எடுத்துவிட முடியும்.

தமிழ், தெலுங்கு, கன்னட திரையுலகங்களில் வேலைகள் நடக்கும் விதம் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், அதிக தென்னிந்திய படங்களில் நடிக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

ரவீனா டாண்டன்
ரவீனா டாண்டன்

மேலும் தனக்கு தமிழ் பேசத் தெரியும் என்ற ரவீனா மும்பையில் இருக்கும்போது மறந்துவிட்டதால் தற்போது மீண்டும் கற்றுவருவதாகக் கூறினார். தமிழ் மிக அழகான மொழி என்று கூறியுள்ள ரவீனா அசலான இந்தியாவின் அசலான சாரம் அதன் மொழிகளிலிருந்தே வெளிப்படுகிறது என்று கூறியுள்ளார்.

ரவீனா டாண்டன்
”ஆடியன்ஸே யோசிக்கும் போது..” எப்படி 7 படம் சைன் பண்ணீங்க? சாய் அபயங்கர் ஓபன் டாக்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com