’அனிமல் பட வெற்றிக்கு பின் ரூ.4 கோடி சம்பளம் கேட்கிறேனா?’ - ராஷ்மிகாவின் அட்டகாசமான பதில்!

தமிழில் சுல்தான் படத்தின் மூலமாக கார்த்தியின் ஜோடியாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. தமிழ், தெலுங்கு மட்டுமல்லாது மலையாளம், ஹிந்தி என்று அனைத்து மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார்.
rashmika mandanna
rashmika mandannaPT

கன்னட மொழியில் வெளியான கிரிக் பார்ட்டி மற்றும் அஞ்சனி புத்ரா படங்களின் மூலம் தனது சினிமா கேரியரை தொடங்கியவர் ராஷ்மிகா மந்தனா. கன்னடாவில் அறிமுக ஆகி இருந்தாலும் இவர் தெலுங்கு சினிமாவில் தான் கோலோச்சி வருகிறார். கீதா கோவிந்தம், டியர் காம்ரேட், புஷ்பா உள்ளிட்ட படங்களின் மூலம் பெரிய அளவில் ரீச் ஆனார்.

தமிழில் சுல்தான் படத்தின் மூலமாக கார்த்தியின் ஜோடியாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. தமிழ், தெலுங்கு மட்டுமல்லாது மலையாளம், ஹிந்தி என்று அனைத்து மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார்.

சமீபத்தில் ராஷ்மிகா மந்தனா, ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான அனிமல் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாக பட்டையைப் கிளப்பியது.

இந்நிலையில், அனிமல் படத்தில் நடிக்க தான் 4 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாகவும், அடுத்தடுத்து நடிக்கவுள்ள படங்களுக்கு தன்னிடம் வரும் தயாரிப்பாளர்களிடம் 4 கோடி சம்பளம் கேட்பதாகவும் தகவல்கள் வலம்வர ஆரம்பித்தது.

இந்நிலையில், இந்த வதந்திகளுக்கு தனது சமூக வலைதளப் பக்கத்தில் நச் என்று பதிலளித்துள்ளார் ராஷ்மிகா.

நான் சம்பளத்தினை உயர்த்தி கேட்பதாக யார் கூறியது. இப்படி செய்திகள் வருவதை பார்த்த பிறகுதான் அப்படி செய்யலாம் என்று தோன்றுகிறது. தயாரிப்பாளர்கள் கேட்டால், ’மீடியாவில் அப்படிதான் சொல்கிறார்கள் சார்.. நான் அவர்களின் வார்த்தைகளின்படி வாழ வேண்டும் அல்லவா?’ என்றுதான் கூறப்போகிறேன்.” என பதிலளித்துள்ளார்.

rashmika mandanna
விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி.. கணவர் போட்டோ உடன் ஐஸ்வர்யா ராய் போட்ட சுவீட்டான பதிவு!

இந்நிலையில் தன்னை குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ராஷ்மிகா கூறிய கருத்து இணையவாசிகளிடையே பேசுப்பொருளாக மாறியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com