விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி.. கணவர் போட்டோ உடன் ஐஸ்வர்யா ராய் போட்ட சுவீட்டான பதிவு!

வெகுநாட்களாக பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது கணவர் அபிஷேக் பச்சன் ஆகிய இருவருக்கும் இடையே விவாகரத்து ஏற்படவுள்ளதாக வதந்திகள் பரவின. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை ஐஸ்வர்யா புகைப்படம் ஒன்றினை பகிர்ந்துள்ளார்.
நடிகை ஐஸ்வர்யா ராய்
நடிகை ஐஸ்வர்யா ராய்முகநூல்

பாலிவுட் நடிகரும் அமிதாப் பச்சனின் மகனுமான அபிஷேக் பச்சன் இன்று தனது 40ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு காலையில் முதலே உறவினர்கள், சக நட்சத்திரங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். ஆனால், அவருக்கு முத்தாய்ப்பான ஒரு வாழ்த்தாக அவரது மனைவியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய்யின் வாழ்த்து அமைந்துள்ளது. இன்னொரு வகையில் பல்வேறு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

பாலிவுட் நட்சத்திரங்களான அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் தம்பதி பாலிவுட் உலகில் அதிகம் போற்றப்படும் காதல் ஜோடி. இவர்கள் தூம் 2, குரு உள்ளிட்ட 7 படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர்.

இந்த ஜோடி 2007 ஆம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்தது. இவர்களது திருமணத்தை பாலிவுட் உலகமே கொண்டாடியது. திருமணத்திற்கு பிறகும் இணைந்து நடித்தனர். 2011 ஆம் ஆண்டு இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் பிறந்தாள்.

அதன் பிறகு வெகுநாட்களாக திரையில் தோன்றாமல் இருந்த ஐஸ்வர்யா ராய் பிறகு மீண்டும் திரையில் தடம் பதிக்க ஆரம்பித்தார். பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் அவர் மிரட்டி இருந்தார். அழகு, குரோத உணர்வு ஆகியவற்றை அற்புதமாக வெளிப்படுத்தி இருந்தார்.

இதனிடையே, இந்த ஜோடி பிரிந்து விட்டதாக தகவல்கள் பரவி வந்தன. இதற்கு முக்கியமான காரணம் பொது இடங்களில் இவர்கள் ஒன்றாக தோன்றாதது. அத்துடன், அபிஷேக் பச்சன் கையில் மோதிரம் இல்லாததாலும், இருவரும் சமூக வலைதளங்களில் ஒருவரை ஒருவர் பின் தொடராததாலும் இருவருக்கும் விவாகரத்து ஆவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வதந்திகள் பரவின. தங்களது குழந்தையின் பள்ளி நிகழ்வில் கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் கலந்து கொண்ட போதும் இந்த பேச்சுகள் நின்றபாடில்லை.

நடிகை ஐஸ்வர்யா ராய்
‘யாரு கும்பிடுற சாமியா இருந்தாலும் சாமி சாமிதான்’-கெத்தாக ரஜினி; மாஸ் காட்டும் லால் சலாம் ட்ரெய்லர்!

இந்நிலையில், வதந்திகளுக்கு முற்று புள்ளி வைக்கும் விதாமாக நடிகை ஐஸ்வர்யா ராய் தனது கணவரின் 48 ஆவது பிறந்தநாளான இன்று (5.2.2024) தனது மகள், கணவருடன் கூடிய புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

மேலும் தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள அவர், “இதோ உங்களுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள். மிகுந்த மகிழ்ச்சி, அன்பு, அமைதி , நல்ல ஆரோக்கியத்துடன் வாழ கடவுள் உங்களுக்கு அருள்புரிவாராக” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவு விவாகரத்து என்று பரவிய வதந்திகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com