\
Ramayana Crosses ₹1,000 Crore Worldwide in Just 8 Days
RamayanaX

துரந்தர் 2, புஷ்பா 2 வரிசையில் ராமாயணா! 8 நாட்களில் ₹1000 கோடி வசூல்!

8 நாட்களில் 1,000 கோடி ரூபாய் வசூல் செய்து துரந்தர் 2, புஷ்பா 2 சாதனையைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தைப் பிடித்தது ராமாயணா திரைப்படம்.
Published on: 

செய்தியாளர்: துர்கா தேவி சரவணன்

ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ள ராமாயணா திரைப்படம் மிகக் குறுகிய காலத்தில் உலகளவில்  1,000 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்தியத் திரையுலகில் மிகக் குறுகிய காலத்தில்  1,000 கோடி ரூபாய் வசூலை ஈட்டிய திரைப்படங்களின் பட்டியலில் தற்போது ராமாயணா: ரைஸ் ஆஃப் எ லெஜண்ட் திரைப்படமும் இணைந்துள்ளது.

மிகக் குறுகிய காலத்தில் உலகளவில்  1,000 கோடி ரூபாய் வசூலை ஈட்டிய திரைப்படங்களில், இயக்குநர் ஆதித்யா தர் இயக்கத்தில் உருவான துரந்தர் 2: தி ரிவெஞ்ச் மற்றும் புஷ்பா 2: தி ரூல் ஆகிய திரைப்படங்கள் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன.  தற்போது குறுகிய நாட்களில் 1000 கோடி வசூலை ஈட்டிய திரைப்படமாக நிதேஷ் திவாரி இயக்கிய  ராமாயணா திரைப்படம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. வெறும் 8 நாட்களில் இப்படம் உலகளாவிய பாக்ஸ் ஆபீஸில்  1,000 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளது.

Ramayana Crosses ₹1,000 Crore Worldwide in Just 8 Days
Ramayana Crosses ₹1,000 Crore Worldwide in Just 8 DaysX

தங்கல் (2016), துரந்தர் 2 (2026), பாகுபலி 2 (2017), புஷ்பா 2 (2024), துரந்தர் (2025), RRR (2022), KGF 2 (2022), ஜவான் (2023), பதான் (2023) மற்றும் கல்கி 2898 AD (2024) ஆகிய திரைப்படங்கள் உலகளவில் ரூ.1,000 கோடி வசூலைக் கடந்துள்ளன. இதனைத் தொடர்ந்து, ரூ.1,000 கோடி வசூல் சாதனையை எட்டிய 11-வது இந்தியத் திரைப்படமாக ராமாயணா உருவெடுத்துள்ளது.

ஒரு திரைப்படத்தின் வாழ்நாள் வசூலைக் கணக்கிடுவது முற்றிலும் வேறுபட்டதாகும். அமீர்கான் நடிப்பில் வெளியான தங்கல் திரைப்படம் ரூ.2,070.30 கோடி உலகளாவிய வசூலுடன் இந்தியாவில் அதிக வசூல் செய்த திரைப்படமாகத் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி 2: தி கன்க்ளூஷன் திரைப்படம் ரூ.1,788.06 கோடி வசூலித்துள்ளது. துரந்தர் 2 திரைப்படத்தின் உலகளாவிய வசூல் ரூ.1,813.39 கோடியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ராமாயணா திரைப்படத்தின் வாழ்நாள் வசூல் எந்தெந்த திரைப்படங்களின் சாதனைகளை முறியடிக்கும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மேலும், ராமாயணா படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு 60 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ராமாயணா இரண்டாம் பாகம் 2028-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Ramayana Crosses ₹1,000 Crore Worldwide in Just 8 Days
புதுமையான களம் ஓகே... ஆனால் திரைக்கதை? | Black Gold Review