ராம் சரணின் இரட்டை குழந்தைகள் பெயரை அறிவித்த தாத்தா சிரஞ்சீவி! | Chirajveeji | Ram Charan
சிரஞ்சீவி குடும்பத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்ததைத் தொடர்ந்து, பாரம்பரியமான பெயர்சூட்டும் விழா நடைபெற்றது. ராம் சரண் மற்றும் உபாசனா தம்பதியின் குழந்தைகளுக்கு 'சிவராம் கொணிதெலா' மற்றும் 'அன்வீரா தேவி கொணிதெலா' என பெயரிடப்பட்டது. சிரஞ்சீவி, சமூக வலைதளங்களில் இந்த பெயர்களின் அர்த்தத்தை பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்தார்.
தெலுங்கு சினிமாவின் ஆளுமை மிக்க குடும்பம் சிரஞ்சீவியுடையது. சமீபத்தில் அந்த குடும்பத்தில் இரு குட்டி நட்சத்திரங்கள் இணைந்துள்ளது. நடிகர் ராம் சரண் மற்றும் உபாசனா கோனிடேலா தம்பதிக்கு ஜனவரி 31ம் தேதி ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை என இரட்டை குழந்தைகள் பிறந்தனர். இதன் மூலம் அவர்களின் மகள் கிளிம் காரா உடன் சேர்த்து, மூன்று குழந்தைகளின் பெற்றோராகியுள்ளனர்.
இப்போது பிறந்துள்ள இரட்டை குழந்தைகளுக்கு சமீபத்தில் பாரம்பரியமான பெயர்சூட்டும் விழா நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வில் குழந்தைகளுக்கு சூட்டிய பெயரையும் அதன் அர்த்தத்தையும் குழந்தைகளின் தாத்தாவும், ஆந்திர சினிமாவின் மெகாஸ்டாருமான சிரஞ்சீவி சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
அப்பதிவில் “எல்லையற்ற மகிழ்ச்சியுடனும், தெய்வீக அருளுடனும் எங்கள் இரண்டு சிறிய ஆசீர்வாதங்களின் அழகான பெயர்களை அறிவிப்பதில் மகிழ்ச்சி ‘ சிவராம் கொணிதெலா’ & ‘அன்வீரா தேவி கொணிதெலா’ (𝑺𝒉𝒊𝒗𝒂 𝑹𝒂𝒎 𝑲𝒐𝒏𝒊𝒅𝒆𝒍𝒂" & "𝑨𝒏𝒗𝒆𝒆𝒓𝒂 𝑫𝒆𝒗𝒊 𝑲𝒐𝒏𝒊𝒅𝒆𝒍𝒂") ‘சிவ’ என்பது சிவ சங்கர வர பிரசாத் (சிரஞ்சீவியின் இயற்பெயர்) அவர்களிடமிருந்து உதித்த, உள்ளார்ந்த வலிமை, ஆன்மிக ஆழம் மற்றும் அமைதியை பிரதிபலிக்கிறது. ‘ராம்’ என்பது ராம் சரணிடமிருந்து வந்தது; நீதிமுறை, கருணை மற்றும் ஒழுக்கத் துணிச்சலை குறிக்கிறது. இந்த பெயர், உள்ளார்ந்த சக்தியும் பொறுப்பான செயலும் இணையும் சமநிலையை குறிக்கிறது.
அன்வீரா தேவி – தெய்வீக பெண்மை (Divine Feminine) பிரதிபலிக்கும் அபூர்வமும் வலிமையும் கொண்ட வெளிப்பாடு. அன்வீரா என்பது அஞ்சாமை, திடத்தன்மை மற்றும் தெய்வீக பாதுகாப்பைக் குறிக்கிறது; கனக துர்கா தேவியின் அருளால் உதித்த பெயர். அருள், துணிச்சல் மற்றும் நிலையான வலிமையை பிரதிபலிக்கும் பெயர்.சிவராம் மற்றும் அன்வீரா தேவி தங்கள் அழகான வாழ்க்கைப் பயணத்தை தொடங்கும் இந்த தருணத்தில், உங்கள் ஆசீர்வாதங்களை வேண்டுகிறோம். அன்பும் நன்றியுடனும் ” என்று குறிப்பிட்டுள்ளார்.

