ராம் சரணின் `பெத்தி' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு! | Peddi | Ram Charan
ராம் சரண் நடிப்பில் புச்சி பாபு சனா இயக்கியுள்ள படம் `பெத்தி'. ஜான்வி கபூர், சிவராஜ்குமார், ஜெகபதி பாபு, பொம்மன் இராணி ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ ஆர் ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
2024ம் ஆண்டு நவம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இப்படம் முதலில் இந்தாண்டு மார்ச் 27ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பட வேலைகள் நிறைவடையாததால் ஏப்ரல் 30ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. படத்தின் ஒரு சண்டைக்காட்சி படப்பிடிப்பின் போது நடிகர் ராம்சரணுக்கு ஏற்பட்ட விபத்தின் காரணமாக படப்பிடிப்பு நின்றது. எனவே படம் இப்போது ஜூன் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது.
சமீபத்தில் ராம்சரணுக்கு உடல்நிலை சீராகி மீதமுள்ள படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து முடித்துள்ளார். இன்று இப்படத்தின் ரிலீஸ் தேதியை செய்தியாளர் சந்திப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். அதன்படி படம் ஜூன் 4ம் தேதி வெளியாகிறது. RRR படத்துக்கு பிறகு ராம் சரண் நடிப்பில் வெளியான `Game Changer' எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. எனவே இந்தப் படத்தின் வெற்றியை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

