ஹாலிவுட்டின் லோலா வி.எஃப்.எக்ஸ்.. இளம் வயது சேனாதிபதியை தத்ரூபமாக காட்ட இந்தியன்-2 படக்குழு தீவிரம்

‘இந்தியன் 2’ திரைப்படம் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகி வருகிறது.

இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் வி.எஃப்.எக்ஸ் (vfx) பணிகள் குறித்த அறிவிப்பை இயக்குநர் ஷங்கர் வெளியிட்டுள்ளார். அதன்படி ஜேமினி மேன், அவஞ்சர்ஸ், மிஷன் இம்பாஸிபிள் போன்ற ஹாலிவுட் படங்களுக்கு பயன்படுத்தப்பட்ட லோலா வி.எஃப்.எக்ஸ் (vfx) இந்தியல் இரண்டில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது கமல்ஹாசனின் சிறு வயது கதாபாத்திரத்திற்காக பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com