“லியோ வெற்றியடைய கடவுளை வேண்டிக்கொள்கிறேன்” - நடிகர் ரஜினிகாந்த்!

“லியோ மிகப்பெரிய வெற்றி அடையணும் என்று ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்” நடிகர் ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்pt web

“லியோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும் என ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்” என நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி விமான நிலையத்தில் பேட்டி அளித்துள்ளார்.

லியோ
லியோPT

ஜெய் பீம் திரைப்படத்தின் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் புதிய திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். ஜெயிலர் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பின் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் என்பதாலும் ஞானவேல் இயக்கும் திரைப்படம் என்பதாலும் இத்திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது கன்னியாகுமரியில் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பு முடிந்து சென்னை செல்வதற்காக இன்று காலை கன்னியாகுமரி-யில் இருந்து தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்திற்கு வந்திருந்தார் ரஜினி.

அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “புவனா ஒரு கேள்விக்குறி திரைப்படத்திற்கு பின் 40 ஆண்டு காலம் கழித்து தற்போது சூட்டிங்-காக தென் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளேன்.

தென் மாவட்ட மக்கள் அன்பான மக்கள். மகிழ்ச்சியாக உள்ளது. அவர்களுடன் புகைப்படம் எடுக்காதது வருத்தம் அளிக்கிறது. லியோ மிகப்பெரிய வெற்றி அடையனும் என்று ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்” என்றார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது. லியோ திரைப்படத்தின் பாடல்கள், முன்னோட்டம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இத்திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ரஜினிகாந்த்
9 மணிக்குதான் முதல் ஷோ! ’லியோ’ சிறப்பு காட்சிகள் குறித்து விஜய் ஃபேன்ஸ்க்கு ஷாக் கொடுத்த தமிழக அரசு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com