நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்க இயலாது : ரஜினி

நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்க இயலாது : ரஜினி
நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்க இயலாது : ரஜினி

நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்க இயலாது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் நாளை நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே அறிவித்தபடி நடிகர் சங்கத் தேர்தல் நாளை காலை 7 மணிக்குத் தொடங்கும் என தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். சென்னை  நடிகர் சங்கத் தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க கோரி விஷால் தொடுத்த வழக்கில் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மயிலாப்பூர் காவல் துணை ஆணையருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

நடிகர் சங்கத் தேர்தலில் 3 ஆயிரத்து 171 பேர் வாக்களிக்க உள்ள சூழலில் ஆயிரத்து 45 பேர் தபால் வாக்குக்கு தகுதி பெற்றவர்கள். தபால் வாக்கு அளிக்கும் உறுப்பினர்களுக்கு வாக்குச் சீட்டுகள் கடந்த 17ஆம் தேதி அனுப்பி வைக்கப்பட்டன. இதில், பதிவு செய்யப்பட்ட வாக்குகளை உறுப்பினர்கள் தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வந்தனர். 

சென்னையில் முகவரி கொண்ட உறுப்‌பினர்கள் நாளை வெளியூரில் இருக்கும் பட்சத்தில் அவர்கள் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம், தேர்தல் அறிவிப்பு வெளியான ஏழு நாட்களுக்குள் அதற்கான கடிதம் கொடுத்து, வாக்குச்சீட்டுகளை தபால் மூலம் பெற்று இருக்க வேண்டும். அப்படி பெறாதவர்கள் சென்னையில் நேரில் வந்தே வாக்களிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்க இயலாது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், “தற்போது நான் மும்பையில் படப்பிடிப்பில் உள்ளேன். நடிகர் சங்கத் தேர்தலுக்கான தபால் வாக்கு இன்று மாலை 6.45 மணிக்கு தான் கிடைத்தது. தபால் வாக்கு தாமதமாக கிடைத்ததால் தன்னால் வாக்களிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. தாமதமாக தபால் வாக்கு கிடைத்ததால் வாக்களிக்க இயலாமல் போனதற்கு வருந்துகிறேன். இது நடந்திருக்கக்கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com