எஸ்.பி.பி நினைவிடத்தை பார்வையிட இரண்டு நாட்களுக்கு பொதுமக்களுக்கு அனுமதி!

எஸ்.பி.பி நினைவிடத்தை பார்வையிட இரண்டு நாட்களுக்கு பொதுமக்களுக்கு அனுமதி!

எஸ்.பி.பி நினைவிடத்தை பார்வையிட இரண்டு நாட்களுக்கு பொதுமக்களுக்கு அனுமதி!
Published on

மறைந்த பாடகர் எஸ்.பி.பியின் நினைவிடத்தை பார்வையிட இரண்டு நாட்களுக்கு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவிலிருந்து பரவிய கொரோனா தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடில்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த, ஆகஸ்ட் 5 ஆம் தேதி கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்.பி.பி, சிகிச்சை பலனளிக்காமல் கடந்த வாரம் உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

திரைத்துரையினர் பலரும் அவரது நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்திவரும் நிலையில், பொதுமக்களுக்கு இரண்டு நாட்கள் பார்வையிட தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ’இன்றும் நாளையும் மாலை 5 மணிவரை பார்வையிடலாம்’ என்று அவரது மகன் எஸ்.பி.பி சரண் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com