\
Producer Thanu Clarifies Suriya-Vetrimaaran’s Vaadivaasal Status
வாடிவாசல்X

சூர்யாவின் வாடிவாசல் கைவிடப்பட்டதா? தயாரிப்பாளர் தாணு தந்த UPDATE

ரூ.3 கோடி செலவில் அனிமேட்ரானிக்ஸ் காளை!!
Published on: 

நடிகர் சூர்யா – இயக்குநர் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் என அறிவிக்கப்பட்ட படம் ‘வாடிவாசல்’. இப்படத்தின் ப்ரோமோ காட்சிகள் வெளியிடப்பட்டது, கூடவே இதில் நடிக்கும் காளையுடன் சூர்யா பழகுவதற்காக அந்த காளை சூர்யா வீட்டில் வளர்க்க அனுப்பப்பட்டது. ஆனால் இந்தப் படத்தில் இருந்து இடைவெளி எடுத்துக் கொண்டு `அரசன்' படத்தை இயக்குவதாக அறிவித்து அதன் வேலைகளில் இருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன். அந்தப் படத்துடன் இணைந்து இப்போது `ராஜன் வகையறா' படத்தையும் இயக்கி வருகிறார். எனவே வாடிவாசல் படம் கைவிடப்பட்டுவிட்டதா? என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது. இந்தக் கேள்விக்கு சம்பீத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்திருக்கிறார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு.

கலைப்புலி எஸ். தாணு
கலைப்புலி எஸ். தாணுX

முன்னதாக, சி.சு. செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ நாவலை அடிப்படையாகக் கொண்டு அதே பெயரில் துவங்கப்பட்டது இந்தப் படம். ஜல்லிக்கட்டை மையமாகக் கொண்ட படம் என்பதால் இதில் நடிக்கும் காளை மிகவும் முக்கியமான பாத்திரம்.

இந்த்ச்சூழலில் தான், பேட்டியில் தாணு கூறிய போது "இப்படத்துக்கான ப்ரோமோ ஷுட் எடுத்த போது, காளை லேசாக சிலுப்பிய போது அதன் கால் பட்டு ஒருவருக்கு அடிபட்டு, கால் உடைந்து போனது. இன்னும் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறோம். இனி ஒரு முழுப் படத்துக்கும் காளையை வைத்து எடுப்பது என்பது மிகவும் அபாயகரமானதாக இருக்கும். பின்னர் இயக்குநர் பாம்பேயில் சிலரை வைத்து அனிமேட்ரானிக்ஸ் காளை உருவாக்க சொன்னார். ஆனால் அது திருப்திகரமாக அமையவில்லை. இப்போது வாடிவாசலுக்கான காலை லண்டனில் தயாராகி வருகிறது.

அது நிஜமான காளையைப் போன்றே தத்ரூபமாக இருக்கிறது. இதற்காக சுமார் ரூ.3 கோடி வரை செலவு செய்திருக்கிறோம். இந்த மாடு சூர்யாவுடன் விளையாடும் போது தியேட்டரே கோலாகலமாகிவிடும். அந்த மாடு என்று வருகிறதோ, அன்று வாடிவாசல் திறக்கும். இதற்காக எடுத்த முயற்சிகள் எதுவும் பட்டுப் போகாது, பெரிதாக முளைக்கும்." என்றார். எனவே இதன் மூலம் வாடிவாசல் படம் கைவிடப்படவில்லை, அதற்கான பணிகளும் நடந்து கொண்டிருப்பது உறுதியாகி இருக்கிறது.

Producer Thanu Clarifies Suriya-Vetrimaaran’s Vaadivaasal Status
சூப்பர் வில்லனின் சோகக் கதை... திகிலூட்டும் BODY HORROR அனுபவம்! | Clayface Review
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com