\
Clayface Review: A Terrifying Body Horror Supervillain Tragedy
ClayfaceClayface

சூப்பர் வில்லனின் சோகக் கதை... திகிலூட்டும் BODY HORROR அனுபவம்! | Clayface Review

மாட் ஹேகனின் வாழ்க்கை கேங்ஸ்டருடன் மோதலால் தலைகீழாக மாறுகிறது.
Published on: 
ஒரு சூப்பர் வில்லன் பிறந்த கதையே Clayface(3 / 5)

ஹாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகரான மாட் ஹேகனின் (Tom Rhys Harries) வாழ்க்கை, ஒரு கேங்ஸ்டருடனான மோதலால் தலைகீழாக மாறுகிறது. அந்த மோதலில் அவரது முகம் சிதைக்கப்படுகிறது. நடிகராகத் தனது அடையாளத்தையும் எதிர்காலத்தையும் இழக்கும் அவர், மீண்டும் பழைய தோற்றத்தைப் பெறுவதற்காக விஞ்ஞானி டாக்டர் கெய்ட்லின் காரின் (Naomi Ackie) பரிசோதனை சிகிச்சையை நாடுகிறார். ஆரம்பத்தில் அவரது முகத்தை மீட்டெடுக்கும் அந்தச் சிகிச்சை, நாளடைவில் அவருக்குள் எதிர்பாராத மாற்றங்களை ஏற்படுத்துகிறது. தனது தோற்றத்தை மாற்றிக்கொள்ளும் திறனைப் பெறும் மாட், பழிவாங்கும் பாதையில் பயணிக்கத் தொடங்குகிறார். அதன்பிறகு அவர் எதிர்கொள்ளும் மனப்போராட்டங்கள் என்ன? அதன் விளைவுகள் என்ன? என்பதே மீதிக்கதை.

Clayface
ClayfaceX

DC காமிக்ஸ் உலகில் பேட்மேனின் எதிரிகளில் ஒருவரான Clayface கதாபாத்திரத்தின் ஆர்ஜின் ஸ்டோரி தான் இந்தப் Clayface. வழக்கமான சூப்பர் ஹீரோ படங்களைப் போல பிரம்மாண்டமான சண்டைகள், ஹீரோயிசம் எனப் பயணிக்காமல், ஒரு மனிதனுக்கு இழைக்கப்படும் அநீதி, எல்லோரையும் இழந்த அவனுக்கு கிடைக்கும் அன்பு, வாழ்வின் மோசமான கட்டத்தில் கிடைக்கும் சக்தி என இயக்குநர் ஜேம்ஸ் வாட்கின்ஸ், உடல் சார்ந்த திகில் காட்சிகளையும் உணர்வுபூர்வமான கதையையும் இணைத்திருக்கிறார். அது மிக சுவாரஸ்யமாக நம்மை கட்டிப்போடுகிறது.

Clayface Review: A Terrifying Body Horror Supervillain Tragedy
காதல் இருக்கு… ஆக்ஷன் இருக்கு… ஆனால் விறுவிறுப்பு? | `அன்பில் அவன்’ திரை விமர்சனம்

இப்படத்தின் முக்கியமான பலம் எழுத்து தான். இது ஒரு வில்லனின் கதை. ஆனால் அவன் எப்படி பழிவாங்கும் நோக்கத்தை கையில் எடுத்தான், தவறான பாதைக்கு சென்றான் என்பதை உணர்வுப்பூர்வமாக காட்டி வலுவான படமாக கொடுத்திருக்கிறார்கள். முதல் பாதியில் அடுத்தடுத்து வரும் திருப்பங்களும், மாட் ஹேகனின் மாற்றங்களும் படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கின்றன.

மாட் ஹேகனாக நடித்துள்ள டாம் ரைஸ் ஹாரிஸ், புகழை இழந்த நடிகனின் விரக்தி, வலி, தனிமை, கோபம் ஆகிய உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறார். கதாபாத்திரத்தின் உடல் மாற்றங்கள் மட்டுமின்றி, மனதளவில் அவர் சந்திக்கும் போராட்டங்களும் நடிப்பில் வெளிப்படுகின்றன. நவோமி அக்கி, விஞ்ஞானி கெய்ட்லின் ஹேகனுக்கு உதவுவதா வேண்டாமா என பல இடங்களில் ஒரு தடுமாற்றத்தை மிக இயல்பாக வெளிப்படுத்தி நடித்திருக்கிறார்.

Clayface
ClayfaceClayface

தொழில்நுட்ப ரீதியாக, முகம் உருகுவது, உடல் உருமாறுவது போன்ற காட்சிகள் படத்தின் பிரதான ஈர்ப்பாக உள்ளன. ஒப்பனை, காட்சியமைப்பு, ஒளிப்பதிவு ஆகியவை ஹாரர் உலகத்தை உருவாக்க உதவுகின்றன. முகம் மாறும் காட்சிகள் சில இன்னும் கொஞ்சம் நேர்த்தியாக இருந்திருக்கலாம். இது Body Horrer வகைப் படம் என்பதால், ரத்தம், சிதைந்த உடல் உறுப்புகள் போன்றவற்றைக் காட்டும் காட்சிகள் சிலருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தலாம்.

இதன் குறைகள் என எடுத்துக் கொண்டால், இரண்டாம் பாதியில் பழிவாங்கும் கதை ஓரளவுக்குக் கணிக்கக்கூடியதாக மாறுவதுடன், திரைக்கதையின் வேகமும் சில இடங்களில் குறைகிறது. ஆனால் இறுதிப் பகுதி மீண்டும் கதைக்கு வலு சேர்க்கிறது. கதையில் சில குறைகள் இருந்தாலும், கதாநாயகனின் நடிப்பும் திகிலூட்டும் காட்சிகளும் மற்றும் ஒரு அழுத்தமான ஆர்ஜின் ஸ்டோரியாகவும் ஈர்க்கிறது இந்த Clayface.

Clayface Review: A Terrifying Body Horror Supervillain Tragedy
முகநூலின் முகமூடியைக் கிழிக்கும் அதிரடி திரில்லர் படம்! | The Social Reckoning Review
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com