\
Ranbir Kapoor's Ramayana creates Box office storm in 4 days
ramayanaramayana part 1

ராவணனை ஆதரித்து எடுக்கப்பட்டதா ராமாயணம்? மனம் திறந்த தயாரிப்பாளர்!

ராமாயணம் திரைப்படத்தில் ராமரை விட ராவணன் கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளதுடன் ராவணனை ஆதரிக்கத் தொடங்கியுள்ளதாகவும் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ள நிலையில் ராமாயணம் திரைப்படத்தின் தயாரிப்பாளர் மனம் திறந்து பேசியுள்ளார்.
Published on: 

செய்தியாளர் - ராஜ்குமார். ர

ராமாயணம் திரைப்படத்தில் ராமரை விட ராவணன் கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளதுடன், சிலர் ராவணனை ஆதரிக்கத் தொடங்கியுள்ளதாகவும் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து ராமாயணம் திரைப்படத்தின் தயாரிப்பாளர் மனம் திறந்து பேசியுள்ளார். அப்படி ராமாயணம் திரைப்படம் குறித்த விமர்சனங்களுக்கு அவர் என்ன பதிலளித்துள்ளார்? பார்க்கலாம்!

ramayana part 1
ramayana part 1Prime Focus Studios/Monster Mind Creations/DNEG

இந்திய இதிகாசங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படும் ராமாயணத்தை மையமாகக் கொண்டு, இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம்தான் ராமாயணம். இந்தத் திரைப்படத்தில் ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும், ராவணனாக யாஷும் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த நவம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்தின் பிரம்மாண்டமான காட்சிகள் மற்றும் நடிகர்களின் நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், குறிப்பாக ராவணனாக நடித்துள்ள யாஷின் கதாபாத்திரம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக ராமாயணக் கதைகளில் ராவணன் எதிர்மறையான கதாபாத்திரமாகவே சித்தரிக்கப்பட்டு வருகிறார். ஆனால், இத்திரைப்படத்தில் இசைத் திறமை கொண்ட சிறுவனாகத் தொடங்கி, தனது மக்களுக்காக வலிமையான அரசனாக உருவாக வேண்டும் என்ற எண்ணத்துடன் வளர்ந்து, பின்னர் அதிகாரம் மற்றும் அகங்காரத்தால் வீழ்ச்சியடையும் கதாபாத்திரமாக ராவணன் சித்தரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், ராவணனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அவரது கதாபாத்திரத்தை உயர்த்திக் காட்டும் வகையில் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் சிலர் விமர்சித்து வருகின்றனர். அதேநேரத்தில், யாஷின் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பும் இந்த விவாதத்தை மேலும் அதிகரித்துள்ளது.

Namit Malhotra
Namit Malhotra Namit Malhotra instagram

இந்நிலையில், ராவணனைப் புகழ்ந்து காட்டியதாக எழுந்த விமர்சனங்களுக்கு படத்தின் தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா விளக்கமளித்துள்ளார். அவர் பேசுகையில், திரைப்படத்தில் ராவணனை நல்லவராகச் சித்தரிக்கவில்லை என்றும், ரசிகர்கள் ரசிப்பது ராவணன் கதாபாத்திரத்தை அல்ல, அந்தக் கதாபாத்திரத்தில் நடித்த யாஷின் நடிப்பைத்தான் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், ராவணன் தனது செயல்கள் மூலம் பல்வேறு அழிவுகளையும் அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்தியதாகவும், அவர் குழந்தைப் பருவத்திலிருந்து எவ்வாறு வலிமையான மன்னராக உருவானார் என்பதையும், அவரது வாழ்க்கைப் பயணத்தையும் திரைப்படத்தில் காட்சிப்படுத்தியுள்ளதாக நமித் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

ஒரு கதாபாத்திரத்தின் பின்னணியை விளக்குவதும், அந்தக் கதாபாத்திரத்தின் செயல்களை நியாயப்படுத்துவதும் வெவ்வேறானவை என்பதையும் அவரது விளக்கம் உணர்த்துகிறது. இவ்வாறு, ராவணன் கதாபாத்திரத்தை உயர்த்திக் காட்டியதாக எழுந்த விமர்சனங்களுக்கு தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா விளக்கமளித்துள்ளது ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.

Ranbir Kapoor's Ramayana creates Box office storm in 4 days
கமல்ஹாசன், மம்மூட்டி, சிரஞ்சீவி - அனிமல் பட இயக்குநர் சொன்ன விஷயம்.. வைரலாகும் கமெண்ட்