\
சந்தீப் ரெட்டி வங்கா
சந்தீப் ரெட்டி வங்காpt web

கமல்ஹாசன், மம்மூட்டி, சிரஞ்சீவி - அனிமல் பட இயக்குநர் சொன்ன விஷயம்.. வைரலாகும் கமெண்ட்

சமீபத்தில் சந்தீப் ரெட்டி வங்கா அளித்த பேட்டியில் கமல்ஹாசன், மம்மூட்டி மற்றும் சிரஞ்சீவி ஆகியோர் பற்றி அவர் தெரிவித்த கருத்து சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகி இருக்கிறது.
Published on: 

தெலுங்கு திரையுலகில் 'அர்ஜுன் ரெட்டி' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சந்தீப் ரெட்டி வங்கா. தொடர்ந்து 'கபீர் சிங்', 'அனிமல்' என அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்து இந்திய அளவில் கவனம் பெற்றார். தற்போது பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் 'ஸ்பிரிட்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் கமல்ஹாசன், மம்மூட்டி மற்றும் சிரஞ்சீவி ஆகியோர் பற்றி அவர் தெரிவித்த கருத்து சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகி இருக்கிறது.

சந்தீப் ரெட்டி வங்கா - தீபிகா படுகோனே - பிரபாஸ்
சந்தீப் ரெட்டி வங்கா - தீபிகா படுகோனே - பிரபாஸ்web

நிறைய நடிகர்கள் அல் பசினோ, ராபர்ட் டி நீரோ போன்றவர்களின் தாக்கம் தங்களுக்கு இருப்பதாக சொல்கிறார்களே, அவர்கள் எதனால் சிறப்பானவர் என நீங்கள் நினைக்கிறீர்கள் என இந்த நேர்காணலில் கேட்டக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த சந்தீப், "நான் வெளிப்படையாக இதைச் சொன்னால் பலரும் என் மீது கோபப்படுவார்கள். ஆனால், கமல் சார், மம்மூட்டி சார், சிரஞ்சீவி சார் ஆகியோரின் கலை பங்களிப்பு அல் பசினோ, ராபர்ட் டி நீரோ போன்ற ஹாலிவுட் நடிகர்களை விடப் பெரியது என்று நினைக்கிறேன்.

ஆனால் அவர்களின் படங்களின் போஸ்டர் தரமானதாக இருக்காது. எனக்கு கமல் சார், மம்மூட்டி சார், சிரஞ்சீவி சார் ஆகியோரின் நிறைய படங்கள் பிடிக்கும். ஆனால் அந்தப் படங்களின் போஸ்டர்கள் அத்தனை சிறப்பாக இருக்காது. அவற்றை இன்னும் மேம்படுத்தினால், அந்தப் படங்கள் இன்னும் பரவலாக பேசப்படும் என நினைக்கிறேன். அல் பசினோ மற்றும் ராபர்ட் டி நீரோ ஆகியோரையும் நான் மதிக்கிறேன். ஆனால் திரைப் பயணம், அவர்கள் ஏற்று நடித்த பலதரப்பட்ட கதாபாத்திரங்கள் போன்ற ரீதியில் நம்மவர்களையே மிகச் சிறந்தவர்களாக கருதுகிறேன்." என்றார்.

சந்தீப் ரெட்டி வங்கா
சந்தீப் ரெட்டி வங்கா

ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான 'அனிமல்' திரைப்படம் குறித்து இந்த நேர்காணலில் பேசிய போது "எனக்குப் பல ஆண்டுகளாக 'தி காட்ஃபாதர்' திரைப்படத்தின் மீது மிகப்பெரிய ஈர்ப்பு இருக்கிறது. திரைப்படக் கல்லூரியில் படித்த காலத்திலிருந்தே அந்தப் படத்தை ரசித்து வருகிறேன். 'அனிமல்' திரைப்படத்தின் சில அம்சங்களில் 'தி காட்ஃபாதர்' படத்தின் தாக்கம் இருந்திருக்கலாம், அந்தப் படத்தின் மீதான எனது நீண்டகால ரசனையால் சில ஒற்றுமைகள் என்னையறியாமல் கதைக்குள் வந்திருக்கலாம்." என்றார்.

பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் 'ஸ்பிரிட்' திரைப்படம் குறித்தும் பேசியவர் "ஸ்ப்ரிட் படத்தின் காட்சிகளை எடுத்தவரை எடிட் செய்து வைத்திருக்கிறேன். மிக சிறப்பாக வந்திருக்கிறது. இந்தப் படத்தை முடித்த உடன் 'அனிமல் பார்க்' திரைப்படத்தின் பணிள் தொடங்கும்" எனத் தெரிவித்துள்ளார்.