குழந்தைகளுக்கான படத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர்!

குழந்தைகளுக்கான படத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர்!

குழந்தைகளுக்கான படத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர்!
Published on

குழந்தைகளுக்கான படத்தில், எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் ஜோடியாக நடிக்கின்றனர். 

’நயன்தாரா’ நடித்த ’மாயா’, சந்தீப் கிஷன் நடித்த ‘மாநகரம்’ போன்ற படங்களை தயாரித்த பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் அடுத்து ’மான்ஸ்டர்’ என்ற படத்தை தயாரிக்கிறது. இதில் எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடிக்கிறார். அவர் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். ’ஒரு நாள் கூத்து’ படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இதை இயக்குகிறார்.

’இது, குழந்தைகளுக்கான திரைப்படம். எஸ்.ஜே.சூர்யா இதுவரை நடித்திராத கேரக்டரில் நடிக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்கிறார். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் போஸ்ட் புரொடெக்‌ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது’ என்று படக்குழு கூறியது.
 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com