“தமிழ் எனக்கு மிகவும் பிடிக்கும்.. ரசிகர்களின் அன்பை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது” - மமிதா

பிரேமலு படத்திற்கு மலையாளம் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், நன்றி தெரிவித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார் நடிகை மமிதா பைஜூ
நடிகை மமிதா பைஜூ
நடிகை மமிதா பைஜூpt web

கிரிஷ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான மலையாள படமான ‘பிரேமலு’-க்கு தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நஸ்லேன், மமிதா பைஜூ உள்ளிட்டோர் முக்கிய பாத்திரத்தை ஏற்று நடித்துள்ள இந்த படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார்.

premalu
premalupt

சுமார் 9 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம், வசூலில் 100 கோடி ரூபாயை கடந்துள்ளது. இதன்மூலம் மலையாள சினிமாவில் அதிக வசூலை வாரிக்குவித்த படங்களின் வரிசையில் பிரேமலு இணைந்துள்ளது.

நடிகை மமிதா பைஜூ
Manjummel Boys: தமிழகத்தில் உச்சம்தொட்ட வசூல் வேட்டை – உலக அளவிலும் மலையாள சினிமாவாக புதிய சாதனை!

இந்நிலையில், படத்தில் நாயகியாக நடித்துள்ள மமிதா பைஜூவையும் சமூகவலைதள பக்கங்களில் ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர். இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, மமிதாவுக்கு படவாய்ப்புகள் அதிகரித்துள்ளது.

நடிகை மமிதா பைஜூ
வணங்கான் திரைப்படத்தில் இருந்து விலகியது ஏன்? மமிதா பைஜூ மீண்டும் விளக்கம்

குறிப்பாக, மஞ்சும்மல் பாய்ஸ் படத்தைப் போன்று பிரேமலு படத்தையும் தமிழ் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். இந்நிலையில்தான், தமிழ் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து நெகிழ்ச்சியாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார் மமிதா பைஜூ.

இதுதொடர்பாக பேசிய அவர், “சமூக வலைதளங்களில் என்னைப்பற்றி வரும் செய்திகளை பார்க்கிறேன். இத்தனை அன்பை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பிரேமலு படத்திற்கு இந்த அளவுக்கு தமிழ் ரசிகர்கள் வரவேற்பு கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கவே இல்லை. நான் ஏற்று நடித்த பாத்திரத்திற்கான வரவேற்பு மிகவும் அதிகமாக இருக்கிறது. அத்தனைக்கும் படத்தின் இயக்குநரே பொறுப்பு. பிரேமலு படத்தில் நான் ஏற்று நடித்துள்ள ‘ரேனு’ பாத்திரத்தை அனைத்து பெண்களாலும் தொடர்புபடுத்தி பார்த்துக்கொள்ள முடியும்.

படப்பிடிப்பு நாட்கள் முழுவதும், குடும்ப சுற்றுலா போன்றுதான் இருந்தது. படம் கேரளாவில் ஹிட் அடிக்கும் என்றுதான் எதிர்பார்த்தோம். ஆனால், தமிழ்நாட்டில் இந்த அளவுக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுப்பார்கள் என்று நினைக்கவில்லை. ‘தமிழ்’ என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழ் படங்களில் நடிக்கும்போது, நானே டப்பிங் கொடுக்க முயற்சி செய்கிறேன். தமிழ் ரசிகர்களுக்கு மிக்க நன்றி” என்று நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

நடிகை மமிதா பைஜூ
‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்துக்காக தொடர்ந்து எட்டு மணி நேரம் டப்பிங் பேசிய கவுண்டமணி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com