\
Tiger Shroff - Eknath Shinde
Tiger Shroff - Eknath Shindeani

நடிகர் டைகர் ஷெராப்பை கொல்ல முயற்சி.. கை, மார்பில் கட்டுடன் வெளியான புகைப்படம்!

பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப்பை கொலைசெய்ய முயற்சி நடந்த சம்பவம் திரையுலகையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
Published on: 
Summary

மும்பையில் நடிகர் டைகர் ஷெராப்பை குறிவைத்து நடந்த துப்பாக்கிச்சூடு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் இதற்குப் பொறுப்பேற்று, சல்மான் கானுடன் இணைந்து பணியாற்றியதால் துப்பாக்கிச்சூடு நடந்ததாக கூறியது. டைகர் ஷெராப்பின் கையில் காயங்கள் ஏற்பட்ட நிலையில், அவரது புகைப்படங்கள் வெளியானது.

மும்பையில் பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப்பை (Tiger Shroff) குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கால்பந்து விளையாடிவிட்டு வீட்டுக்கு திரும்பும் வழியில் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர், துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சொல்லப்படுகிறது. இதில் டைகர் ஷெராப் நல்வாய்ப்பாக உயிருக்கு எந்த ஆபத்தும் இன்று தப்பினார். படுகாயமடைந்த அவரின் கார் ஓட்டுநர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

Gunfire Targets Tiger Shroff’s Car in Mumbai
டைகர் ஷெராஃப்Instagram

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள ஆடியோவில், தங்களின் எச்சரிக்கையை மீறி சல்மான் கானுடன் இணைந்து பணியாற்றியதால் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்பட்டுள்ளது.

இந்தசூழலில் தான் கை, மார்பில் கட்டுடன் இருக்கும் டைகர் ஷெராப்பின் புகைப்படம் வெளியாகியுள்ளது. டைகர் ஷெராப்பின் இல்லத்திலிருந்து வெளியான புகைப்படத்தில், அவர் மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுடன் உரையாடியபோது, ​​நடிகரின் தோள்பட்டை மற்றும் மார்பில் காயக்கட்டுகளும், வலது கையில் கட்டும் போடப்பட்டிருந்தது காணப்பட்டன.

டைகர் ஷெராபை சந்தித்தபிறகு பேசியிருக்கும் ஏக்நாத் ஷிண்டே, துப்பாக்கிச் சூட்டின்போது வெடிமருந்து மற்றும் உடைந்த கண்ணாடித் துண்டுகளால் டைகர் ஷெராஃபின் கையில் காயங்கள் ஏற்பட்டதாக ஷிண்டே கூறினார். மேலும் மக்களை அச்சுறுத்தும் இத்தகைய முயற்சிகள் பொறுத்துக்கொள்ளப்படாது, இந்த ரவுடித்தனத்திற்கு நாங்கள் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் கூறினார்.

Tiger Shroff - Eknath Shinde
காலத்தாலும் அழியாத தேவாவின் 10 'MasterPiece' பாடல்கள்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com