நாயாக மாறிய ஜப்பானியர், மீண்டும் பூனை அல்லது நரியாக மாற திட்டம்? ஊடகங்களிடம் சொன்ன சுவாரஸ்ய தகவல்!

கடந்த வருடம் நாயாக மாறிய (ஆடை வடிவமைப்பின்மூலம் மட்டுமே மாறியிருக்கிறார். அறுவை சிகிச்சைகள் ஏதும் செய்யவில்லை) ஜப்பானியர் ஒருவர், மீண்டும் தான் வேறு விலங்காக மாறப்போவதாக ஜப்பானிய செய்தி நிறுவனம் ஒன்றிக்கு பேட்டியளித்துள்ளார்.
டோகோ
டோகோ முகநூல்

பொதுவாக செல்லப்பிராணிகளின் மீது மனிதர்களுக்கு இருக்கும் அன்பை வர்ணிக்க வார்த்தையே இல்லை. தாங்கள் வளர்க்கும் விலங்கின் பெயரை வீட்டு ரேஷன் கார்டில் மட்டும்தான் சேர்ப்பதில்லை. மற்றபடி, அவற்றை தங்களின் குடும்பத்தின் ஒரு உறுப்பினராகவே பார்க்கும் அளவிற்கு பிரியமானவர்களாக இருப்பார்கள்.

இது விலங்குகளின் மீது மனிதர்களுக்கு இருக்கும் அன்பை வெளிப்படுத்துகிறது என்பது மறுப்பதற்கில்லை. ஆனால், ஜப்பானில் ஒருவர் இதையெல்லாம் கடந்து விலங்காகவே தன்னைமாற்றி கொண்டுள்ளது வியப்பினையும் அதிர்ச்சியினையும் கடந்த வருடம் ஏற்படுத்தியது.

(குறிப்பு - ஆடை வடிவமைப்பு நிறுவனத்தின் மூலம் தனக்கு பிடித்த நாயின் தோற்றத்தை கொடுக்கும் உடையை தயாரித்து, அதை அணிந்துகொண்டார். அதுவே நாய் போன்ற தோற்றத்தை அவருக்கு கொடுத்துள்ளது. மற்றபடி அறுவை சிகிச்சை ஏதும் செய்யவில்லை)

அதன்படி, இந்திய தொகையில் சுமார் 12 லட்சம் ரூபாய் செலவு செய்து வெளித்தோற்றத்தில் தன்னை நாயாக மாற்றிய டோகோ என்ற ஜப்பானியர் ஒருவர், தற்போது இன்னும் பல விலங்குகள் போல தன்னை மாற்றிக்கொள்ள ஆசைக்கொள்வதாக தெரிவித்துள்ளார். இது நிச்சயம் ஒருநாள் சாத்தியமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜப்பானிய செய்தி நிறுவனம் ஒன்றிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “நாய்களுக்கும் மனிதர்களுக்கும் வெவ்வேறு எலும்பு அமைப்புகள் இருக்கும். கால்கள், கைகளை வளைப்பது என மனிதர்களில் இருந்து நாய்கள் மிகவும் வேறுபட்டு காணப்படுகின்றன. ஆகவே நாய்களை போலவே நடப்பது என்பதெல்லாம் மிகவும் கடினம்.

டோகோ
மீம்ஸ் நாயகன் 'கபோசு நாய்’ இறப்பால் சோகத்தில் ரசிகர்கள்! புகழின் உச்சிக்கு கபோசு சென்றது எப்படி?

ஆகவே நான் என் கை கால்களை நாய்களை போல மாற்றுவதற்கான முயற்சிகளை ஆராய்ந்து வருகிறேன். பொதுவாக நாய்கள் அசுத்தம் ஆகும்போது, அவற்றின் உரோமங்களில் அந்த அழுக்கு படிந்து விடுகிறது. அதனை சுத்தம் செய்வதற்கு அதிக உழைப்பை செலுத்த வேண்டியுள்ளது. அதேநேரம் கண்டிப்பாக நான் நாயிலிருந்து மற்றொரு விலங்காகவும் மாற ஆசைப்படுகிறேன்.

அது, பாண்டா, அல்லது கரடி, அல்லது நரி, அல்லது பூனை என ஏதோ ஒன்று. இவற்றில் ஏதேனும் ஒன்றாக மாறவே நான் ஆசைப்படுகிறேன். ஆனால் பூனையும் நரியும் மிகவும் சிறியவை என்பதால், எதார்த்தத்தை உணரும் போது அது சாத்தியமில்லை என்று தோன்றுகிறது. நிச்சயம் ஏதாவது ஒருநாள் எனது ஆசையை நிறைவேற்றுவேன்.” என்று தெரிவித்துள்ளார்.

டோகோ
துருக்கி நிலநடுக்கம்: மீட்புப்பணிகளில் இந்திய மோப்ப நாய்கள்! நெகிழ வைக்கும் புகைப்படங்கள்

யார் இந்த டோகோ?

ஜப்பானியரான டோகோ, விலங்குகளின் மீது கொண்ட அதீத காதலால் தன்னைத்தானே கடந்த வருடம் நாயாக மாற்றிக்கொண்டார். ஆனால் அவர் இதற்காக அறுவை சிகிச்சையோ முக மாற்றுதல்களோ பெறவில்லை

அவற்றுக்கு பதிலாக Zeppet என்ற ஆடை வடிவமைப்பு நிறுவனத்தின் மூலம் தனக்கு பிடித்த நாயாக மாறினார். டோகோவுக்கு Collie என்ற இனத்தை சேர்ந்த நாயை மிகவும் பிடிக்குமாம். இதனால், அதன் உடலை போலவே ஆடையை தயாரித்து, அதை அணிந்து உண்மையான நாயை போல தெருக்களில் நான்கு கால்களில் நடப்பது, சாப்பிடுவது போன்ற அனைத்தையும் செய்து வந்துள்ளார்.

மேலும் இது குறித்தான வீடியோக்களை தனது யூட்யூப் சேனலிலும் பதிவிட்டு நல்ல வரவேற்பினையும் பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது சேனலின் பெயரேவும் ‘I want to be an animal’ (நான் ஒரு விலங்காக இருக்க வேண்டும்).

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com