த்ரிஷா குறித்த சர்ச்சை பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த பார்த்திபன்
த்ரிஷா குறித்த சர்ச்சை பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த பார்த்திபன்web

”குந்தவை வீட்டுக்குள்ளே..” சர்ச்சை பேச்சுக்கு த்ரிஷா கண்டனம்.. வருத்தம் தெரிவித்த பார்த்திபன்!

குந்தவையை வீட்டுக்குள்ளே குந்தவைத்தால் நல்லது என சர்ச்சைக்குரிய வகையில் பார்த்திபன் பேசியதற்கு நடிகை த்ரிஷா கண்டனம் தெரிவித்துள்ளார்.
Published on
Summary

நடிகர் பார்த்திபன் நிகழ்ச்சி ஒன்றில் த்ரிஷாவின் புகைப்படத்தை பார்த்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை த்ரிஷா கண்டனம் தெரிவித்தார். த்ரிஷா தனது சமூக வலைதளத்தில், 'மைக் இருப்பதால் கூறும் கருத்து புத்திசாலித்தனமாகவோ, நகைச்சுவையாகவோ ஆகிவிடாது' என மறைமுகமாக தாக்கினார். பார்த்திபன் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார்.

நடிகரும், தவெக தலைவருமான விஜய் மற்றும் அவருடைய மனைவி சங்கீதா இருவருக்குமான விவாகரத்து பிரச்னை பேசுபொருளாக இருந்துவரும் நிலையில், விஜய்-த்ரிஷா இருவரும் சேர்ந்து ஒரே நிற ஆடையுடன் பொதுவெளியில் தோன்றியது சமூகவலைதளத்தில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.

vijay trisha
vijay trisha

இந்தசூழலில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் பார்த்திபன், த்ரிஷாவின் புகைப்படத்தை பார்த்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். அவர் பேசுகையில், ”குந்தவை வீட்டுக்குள்ளேயே குந்தவைக்கப்பட்டால் நல்லது” என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

தற்போது பார்த்திபன் பேசியதற்கு நடிகை த்ரிஷா கண்டனம் தெரிவித்துள்ளார்.

த்ரிஷா குறித்த சர்ச்சை பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த பார்த்திபன்
’மனைவி, மகளை விரட்டிவிட்டு.. மகளிர் தினவிழா’ - விஜயை விமர்சித்த இயக்குநர் அமீர்!

கண்டனம் தெரிவித்த த்ரிஷா..

தன்னுடைய சமூகவலைதளத்தில் பதிவிட்டிருக்கும் த்ரிஷா, ”ஒருவரிடம் மைக் இருப்பதால் அவர் கூறும் கருத்து புத்திசாலித்தனமாகவோ, நகைச்சுவையாகவோ ஆகிவிடாது. அது முட்டாள்தனத்தை சத்தமாக கூறு‌ம்.

அறிவு இல்லாத வார்த்தைகள், அவை யாரை நோக்கிச் செல்கின்றன என்பதைவிட, பேசுபவரைப் பற்றி அதிகம் கூறுகின்றன” என்று தன்னைப் பற்றி விமர்சித்த நடிகர் பார்த்திபன் மீது நடிகை த்ரிஷா மறைமுகமாக தாக்கி பதிவிட்டுள்ளார்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக பதிவிட்டிருக்கும் பார்த்திபன், ”எது நடந்ததோ அது தவறாகவே நடந்துள்ளது இதில். வருந்துவதைத் தவிர வேறு வழியில்லை!” என பதிவிட்டு அவரது குரலில் அங்கிய வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

த்ரிஷா குறித்த சர்ச்சை பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த பார்த்திபன்
”மிரட்டல் விடுகின்றனர்..” விஜய்க்கு பேரதிர்ச்சி கொடுத்த மனைவி சங்கீதா!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com