Vanangaan, Game Changer, Madraskaaran உட்பட பல திரைப்படங்கள் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகின்றன. அவற்றை இங்கே காணலாம்...
Peter Berg இயக்கியுள்ள சீரிஸ் `American Primeval'. மேற்கு அமெரிக்காவின் அதிகாரத்தை கைப்பற்ற நடக்கும் மோதல்கள்தான் கதை.
Eriq LaSalle இயக்கியுள்ள சீரிஸ் `On Call'. ரோந்து பணியில் இருக்கும் இரு காவலர்கள் தீர்க்கும் பிரச்சனைகளே கதை.
விக்ரமாதித்யா மோத்வானே இயக்கியுள்ள சீரிஸ் `Black Warrent'. திஹார் சிறையில் ஒரு அதிகாரிக்கு நிகழும் விஷயங்களே கதை.
Pushan Kripalani இயக்கத்தில் கல்கி கோச்லின் நடித்த படம் `Goldfish'. தன் அம்மா டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டிருக்க, அவரை கவனித்துக் கொள்ள வருகிறாள் அனாமிகா. அம்மா - மகளுக்கு இடையேயான உரையாடலே கதை.
Ti West இயக்கிய படம் ` MaXXXine'. ஒரு அடல்ட் பட நடிகை சந்திக்கும் பிரச்சனைகளே படம்.
ரவி வர்மா இயக்கிய படம் `Neeli Megha Shyama'. ஒரு இளைஞன் ட்ரெக்கிங் செல்கிறார், அவரது இன்ஸ்ட்ரெக்டருடன் செல்லும் இந்த பயணம் அவரது வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பதே கதை.
பாசி ரெட்டி இயக்கிய படம் `Hide N Seek’. ஒரு போலீஸ் மற்றும் forensic agent இணைந்து, சீரியல் கில்லர் சம்பந்தப்பட்ட வழக்கை விசாரிப்பதே கதை.
ஜோஃபின் இயக்கத்தில் ஆசிஃப் அலி, அனஸ்வரா ராஜன் நடித்துள்ள படம் ` Rekhachithram'. சஸ்பென்ஷனில் இருந்து மீண்டும் பணியில் சேரும் காவலர் தன் இழந்த மரியாதையை மீட்க, 40 வருடமாக தீராத ஒரு கேஸை கையில் எடுக்கிறார். அதை முடித்தாரா? என்பதே கதை.
பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள படம் `வணங்கான்'. அன்புக்கு மட்டும் பணியும் ஒருவன், அநீதிக்கு எதிராக போராடுவதே கதை.
வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் ஷேன் நிகம், கலையரசன் நடித்துள்ள படம் `மெட்ராஸ்காரன்'. இருவரின் மோதல், மிகப்பெரிய பகையாக மாறிய பின்பு என்ன ஆகிறது என்பதே கதை.
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள படம் `Game Changer'. ஒரு ஐ ஏ எஸ் அதிகாரிக்கும், முதலமைச்சருக்கும் இடையே ஏற்படும் மோதல் என்னாகிறது என்பதே கதை.
சோனு சூட் இயக்கி நடித்துள்ள படம் `Fateh'. முன்னாள் கேங்க்ஸ்டர், ஒரு பெண்ணுக்கு பாடிகார்ட்டாக செல்கிறான், அதன் பின் நடப்பவையே கதை.
Christian Gudegast இயக்கியுள்ள படம் `Den of Thieves 2: Pantera'. 2018ல் வெளியான `Den of Thieves' படத்தின் சீக்குவலாக உருவாகியிருக்கிறது. டானி வில்சன் இம்முறை திட்டமிடும் கொள்ளையை செரிஃப் ஓப்ரைன் தடுத்தாரா என்பதே கதை.
Robert Eggers இயக்கியுள்ள படம் `Nosferatu'. ரத்த காட்டேரியை மையப்படுத்திய ஹாரர் படம்.