Kannur Squad | Chiththa | The Crown | Rustin
Kannur Squad | Chiththa | The Crown | Rustin Canva

இந்த வார ஓடிடி லிஸ்ட் எல்லாம் அள்ளுதே..!

நெட்பிளிக்ஸில் rustin , ஆப்பிள் டிவியில் monarch , ஹாட்ஸ்டாரில் கண்ணூர் ஸ்குவாட், சித்தா என இந்த வாரம் ஓடிடியில் நிறைய நல்ல படைப்புகள் வெளியாகவிருக்கின்றன.

1. The Crown Season 6: P1 (English) Netflix - Nov 16

The Crown
The CrownNetflix

இரண்டாம் எலிசபெத் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான சீரிஸ் `The Crown'. ஐந்து சீசன்கள் ஏற்கெனவே வெளியாகிவிட்டது. இப்போது கடைசி சீசனான 6வது சீசனின் முதல் பாகம் வெளியாகிறது. இதில் முதல் நான்கு எப்பிசோடுகளும், மீதமுள்ள ஆறு எப்பிசோடுகள் டிசம்பர் 14ம் தேதியும் வெளியாகிறது.

2. A Murder at the End of the World (English) Hotstar - Nov 16

A Murder at the End of the World
A Murder at the End of the WorldHotstar

Brit Marling, Zal Batmanglij இயக்கியிருக்கும் சீரிஸ் `A Murder at the End of the World'. Darby Hart என்ற ஆர்வக் கோளாறு டிடெக்டிவ் பற்றிய கதைதான் இது. Darby மற்றும் இன்னும் எட்டு பேர் ஒரு பணக்காரரின் பார்ட்டிக்கு செல்கின்றனர். அங்கு ஒருவர் கொலை செய்யப்படுகிறார். Darby எப்படி கொலையாளியைக் கண்டுபிடிக்கிறாள் என்பதே கதை.

3. Monarch: Legacy of Monsters (English) Apple TV+ - Nov 17

Monarch: Legacy of Monsters
Monarch: Legacy of MonstersApple TV+

காட்ஸில்லா - டைட்டன்ஸ் இடையிலான மோதலை வைத்து உருவாகியிருக்கும் சீரிஸ் `Monarch: Legacy of Monsters'.

4. The Railway Men (Hindi) Netflix - Nov 18

The Railway Men
The Railway MenNetflix

போபல் பேரழிவை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இந்தி சீரிஸ் `The Railway Men'. தொழிற்சாலையில் இருந்து விஷவாயு பரவத் தொடங்கியதும், மக்களை காப்பாற்ற போராடிய சில இரயில்வே தொழிலாளர்கள் பற்றிய கதையாக விரிகிறது சீரிஸ். மாதவன், கேகே மேனன், ஜூஹி சாவ்லா முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

5. How to Become a Mob Boss (English) Netflix - Nov 14

How to Become a Mob Boss
How to Become a Mob BossNetflix

மிகக் கொடூரமான டான்களைப் பற்றிய ஆவணத் தொடராக உருவாகியிருக்கிறது `How to Become a Mob Boss'. உலகையே அதிர வைத்த டான்களையும், குற்றவாளிகளையும் பற்றி பகடியாக விவரிக்க இருக்கிறார்கள். அதற்கு ஏற்றது போல நக்கல் மன்னன் Peter Dinklage தான் இவர்களின் கதையை நரேட் செய்ய இருக்கிறார்.

6. Apurva (Hindi) Hotstar - Nov 15

Apurva
ApurvaHotstar

Nikhil Nagesh Bhat இயக்கத்தில் உருவாகியுள்ள இந்திப் படம் `Apurva’. ஒரு கொள்ளை கும்பலிடம் மாட்டிக் கொள்ளும் ஒரு பெண், அவர்களிடமிருந்து தப்பித்தாரா இல்லையா என்ற சர்வைவல் ட்ராமா தான் கதை.

7. Rustin (English) Netflix - Nov 17

Rustin
RustinNetflix

George C. Wolfe இயக்கியிருக்கும் படம் `Rustin’. சமூக செயற்பாட்டாளர் Bayard Rustin ஒரு ப்ளாக் மற்றும் ஓரினச்சேர்க்கையாளர் என்பதற்காக பல தாக்குதல்களை எதிர்கொள்கிறார். அதற்கெதிராக 1960களில் அவர் முன்னெடுத்த சட்ட போராட்டத்தை இந்தப் படத்தில் பதிவு செய்திருக்கிறார்கள்.

8. See You On Venus (English) Hotstar - Nov 17

See You On Venus
See You On VenusHotstar

Joaquín Llamas இயக்கியிருக்கும் படம் `See You On Venus'. 18 வருடமாக அனாதையாக வளர்ந்த மியா, தன் தாய் பற்றிய தகவல் கிடைத்த பின் அவரைத் தேடி கிளம்புகிறாள். வழியில் அவளுக்கு கெய்ல் என்ற இளைஞனின் நட்பு கிடைக்கிறது. அதன் பின் இந்த இருவரின் பயணம் என்னவாகிறது என்பதே படம்.

9. Dashing Through the Snow (English) Netflix - Nov 17

Dashing Through the Snow
Dashing Through the SnowNetflix

Fantastic Four, Tom & Jerry போன்ற படங்களை இயக்கிய Tim Story இயக்கி தற்போது வெளியாகும் படம் `Dashing Through the Snow'. கிறிஸ்துமஸ் நெருங்கும் வேளையில் வரிசை கட்டும் கிறிஸ்துமஸ் ஃபேண்டசி படங்களில் ஒன்றுதான் இதுவும். விவாகரத்து பெற்ற தந்தை தன் மகளை அழைத்து செல்லும் பயணமே படத்தின் கதை. இவர்களுடன் சாண்டாக்ளாஸும் இணைந்து கொள்கிறார், அதன் பின் நடக்கும் காமெடி கலாட்டாக்களே படம்.

10. Believer 2 (Korean) Netflix - Nov 17

Believer 2
Believer 2Netflix

Lee Hae-young இயக்கத்தில் 2018ல் வெளியன கொரிய மொழிப்படம் `Believer. அதன் இரண்டாம் பாகம் Baek Jong-yul இயக்கத்தில் வெளியாகவுள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய போதைப் பொருள் கும்பலையும், அதன் தலைவனையும் துரத்தும் டிடெக்டிவின் கதைதான் இது.

11. Raja Marthanda (Kannada) Sun NXT - Nov 12

Raja Marthanda
Raja Marthanda Sun NXT

கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா நடிப்பில் வெளியான கடைசி திரைப்படம் ` Raja Marthanda’. அவரின் மறைவுக்கு முன்பு படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்தாலும், சிரஞ்சீவி கதாபாத்திரத்திற்கு அவரது சகோதரர் துருவ் சர்ஜா டப்பிங் பேசியிருக்கிறார். மனிதர்களுக்குள் ஸ்ப்ளிட் பர்சனாலிட்டி பற்றி ஆராய்ச்சி செய்யும் ஒரு மாணவி, அவருக்கு உதவும் ஹீரோ இதுவே படத்தின் கதை.

12. Theeppori Benny (Malayalam) Prime - Nov 15

Theeppori Benny
Theeppori BennyPrime

அர்ஜூன் அசோகன் நடிப்பில் வெளியான மலையாளப்படம் `Theeppori Benny'. பென்னிக்கும் அவரது தந்தையும் கம்யூனிஸ்டுமான செட்டாயி பற்றிய கதையே படம்.

13. Chiththa (Tamil) Hotstar - Nov 17

Chiththa
ChiththaHotstar

S U அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த், நிமிஷா சஜயன் நடித்த படம் `சித்தா’. ஈஸ்வரனினுக்கு தன் அண்ணன் மகள் மேல் தனிப் பிரியம். அவளுக்கு நேரும் ஒரு அசம்பாவிதத்தை, ஈஸ்வரன் எப்படி எதிர்கொள்கிறார் என்பதே கதை.

14. Kannur Squad (Malayalam) Hotstar - Nov 17

Kannur Squad
Kannur SquadHotstar

ராபி வர்கீஸ் ராஜ் இயக்கத்தில் மம்மூட்டி நடித்த மலையாளப்படம் `Kannur Squad'. ஒரு போலீஸ் குழு, சட்ட விரோத கும்பல் ஒன்றை துரத்துவதும், பிடிக்க எடுக்கும் முயற்சிகளுமே படத்தின் கதை.

15. Ghost (Kannada) Zee5 - Nov 17

Ghost
GhostZee5

M. G. ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் சிவராஜ்குமார் நடித்த கன்னடப்படம் `Ghost'. ஒரு கேங்க்ஸ்க்டர் கும்பலால், சிறைச்சாலை ஹைஜாக் செய்யப்படுகிறது. எதனால் இது நடந்தது? என்பதுதான் மீதிக்கதை.

16. Sukhee (Hindi) Netflix - Nov 17

Sukhee
SukheeNetflix

சோனல் ஜோஷி இயக்கத்தில் ஷில்பா ஷெட்டி நடித்த இந்திப்படம் `Sukhee’. குடும்பத்தை அமைதியாக நிற்வகிக்கும் சுக்ப்ரீத், தனது இளம் வயதில் படு டெரரான நபர். மீண்டும் அந்த நாட்களை அசை போட, ஸ்கூல் ரீயுனியன் மூலம் வாய்ப்பு கிடைக்கிறது. அதன் பின் என்னாகிறது என்பதே கதை.

17. Ambunaadu Onbathukuppam (Tamil) - Nov 17

Ambunaadu Onbathukuppam
Ambunaadu Onbathukuppam

ராஜாஜி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `அம்புநாடு ஒம்பதுகுப்பம்’. சமூக ஒடுக்குமுறைகளை மையமாக வைத்து துரை குணா எழுதிய `ஊரார் வரைந்த ஓவியம்' என்ற புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது இப்படம்.

18. Chaitra (Tamil) - Nov 17

Chaitra
Chaitra

யாஷிகா ஆனந்த் லீட் ரோலில் நடித்திருக்கும் படம் `சைத்ரா’. சைத்ரா என்ற பெண் மர்மமான முறையில் காணாமல் போகிறார் அவரை கண்டுபிடிக்க திவ்யா என்ற டிடெக்டிவ் எடுக்கும் முயற்சிகள் தான் கதை.

19. Mangalavaaram (Telugu) - Nov 17

Mangalavaaram
Mangalavaaram

தெலுங்கில் RX 100, Maha Samudram படங்களை இயக்கிய அஜய் பூபதி தற்போது இயக்கியிருக்கும் படம் `Mangalavaram. பல மர்மங்கள் நிறைந்த ஒரு கிராமம். அங்கு வசிக்கும் ஷைலு என்ற பெண்ணை மையப்படுத்தி அந்த மர்மங்களுக்கு விடை சொல்கிறது படம்.

20. My Name Is Shruthi (Telugu) - Nov 17

My Name Is Shruthi
My Name Is Shruthi

ஹன்சிகா மோத்வானி லீட் ரோலில் நடித்திருக்கும் தெலுங்குப்படம் `My Name Is Shruthi'. உடலுறுப்பு கடத்தலை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இந்த த்ரில்லர் படம், முக்கியமாக தோலை கடத்தும் கும்பல் பற்றி சொல்ல இருக்கிறது.

21. Sesham Mike-il Fathima (Malayalam) - Nov 17

Sesham Mike-il Fathima
Sesham Mike-il Fathima

கல்யாணி ப்ரியதர்ஷன் லீட் ரோலில் நடித்திருக்கும் மலையாளப்படம் `Sesham Mike-il Fathima'. மலபார் இஸ்லாமிய பெண், கால்பந்தாட்ட வர்ணனையாளராக ஆசைப்படுகிறார். அவரது ஆசை நிறைவேறியதா என்பதே கதை.

22. Family (Malayalam) - Nov 17

Family
Family

நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் பேசில் ஜோசப் நடித்திருக்கும் மலையாளப்படம் `Family’. ஒரு வினோதமான குடும்பமும். அந்தக் குடும்பத்தில் நடக்கும் கலாட்டாக்களுமே கதை.

23. Phoenix (Malayalam) - Nov 17

Phoenix
Phoenix

விஷ்ணு பரதன் இயக்கத்தில் அஜூ வர்கீஸ் நடித்திருக்கும் மலையாளப்படம் `Phoenix'. ஜான் மற்றும் அவரது குடும்பம் தீவுப் பகுதியில் இருக்கும் கிராமத்திற்கு குடிபெயர்ந்து செல்கிறது. புது வாழ்க்கையை துவங்க நினைக்கும் அவர்களுக்கு அந்த நிலம் வைத்திருக்கும் அதிர்ச்சிகள் தான் கதை.

24. Cheena Trophy (Malayalam) - Nov 17

Cheena Trophy
Cheena Trophy

அனில் லால் இயக்கத்தில் தியான் ஸ்ரீனிவாசன் நடித்திருக்கும் மலையாளப்படம் `Cheena Trophy’. உள்ளூரில் வசிக்கும் ஒரு சமையல் கலைஞரை மையமாக வைத்து நகரும் காமெடிப் படம்.

25. Sapta Sagaradaache Ello - Side B (Kannada) - Nov 17

Sapta Sagaradaache Ello - Side B
Sapta Sagaradaache Ello - Side B

ஹேமந்த் ராவ் இயக்கத்தில், ரக்‌ஷித் ஷெட்டி, ருக்மணி வசந்த் நடித்த கன்னடப்படம் `Sapta Sagaradaache Ello'. இதன் முதல் பாகம் செப்டம்பர் மாதம் வெளியானது. தற்போது அதன் இரண்டாம் பாகமாக Sapta Sagaradaache Ello - Side B வெளியாகிறது. மனு - ப்ரியா இருவரின் காதலை முதல் பாகத்தில் பேசிய படம், இந்த முறை ரத்தம் தெறிக்க, தெறிக்க, கேங்க்ஸ்டராக மாறிய மனுவின் கதையை சொல்ல இருக்கிறது.

26. Next Goal Wins - (English) - Nov 17

Next Goal Wins
Next Goal Wins

Thor: Ragnarok, Jojo Rabbit, Thor: Love and Thunder போன்ற படங்களை இயக்கிய Taika Waititi தற்போது இயக்கியிருக்கும் படம் `Next Goal Wins'. American Samoa soccer team பற்றியும், 2001 FIFAவில் அவர்கள் விளையாடியது பற்றியும் சொல்ல இருக்கிறது படம்.

27. The Hunger Games: The Ballad of Songbirds and Snakes - (English) - Nov 17

The Hunger Games: The Ballad of Songbirds and Snakes
The Hunger Games: The Ballad of Songbirds and Snakes

Constantine, I Am Legend, The Hunger Games படத்தின் முதல் மூன்று பாகங்கள் போன்றவற்றை இயக்கியவர் Francis Lawrence. Panem Presidentடாக ஆவதற்கு முன்பு Coriolanus Snow என்ன செய்தார் என்ற கதைதான் இந்தப் படம். குறிப்பாக 10வது Hunger Games சமயத்தில் நடக்கும் விஷயங்களை விவரிக்கிறது.

28. Trolls Band Together - (English) - Nov 17

Trolls Band Together
Trolls Band Together

பிரபல ஹாலிவுட் அனிமேஷன் ம்யூசிகல் படம் Trolls. இதன் மூன்றாவது பாகமாக வர இருக்கிறது `Trolls Band Together'. Poppy மற்றும் Branch காதலர்களாக வாழ்க்கையை துவங்குகிறார்கள். அந்த சமயத்தில் Branchன் சகோதரன் Floyd ஒரு ஆர்வக்கோளாறு பாப் சிங்கரால் கடத்தப்படுகிறான். தங்கள் சகோதரனை மீட்க Branch மற்றும் சகோதரர்கள் செய்யும் சாகசங்கள் தான் படம்.

29. Thanksgiving - (English) - Nov 17

Thanksgiving
Thanksgiving

Hostel, Knock Knock போன்ற படங்களை இயக்கிய Eli Roth தற்போது இயக்கியிருக்கும் படம் `Thanksgiving'. Robert Rodriguez Quentin Tarantino இயக்கிய Grindhouse படத்திற்கு, ஒரு போலியான டிரெய்லரை இயக்கி வெளியிட்டார் Eli Roth. அந்த போலி டிரெய்லரை இப்போது ஒரு படமாக இயக்கியிருக்கிறார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com