Chandramukhi 2, Iraivan Chithha Kannur Squad
Chandramukhi 2, Iraivan Chithha Kannur Squadtheatre

நாலு நாள் லீவுக்கு இத்தனை படங்களா..!

எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த், நிமிஷா நடித்திருக்கும் படம் `சித்தா’. ஒரு குற்றச்சம்பவம், அதைத் தொடர்ந்து நடக்கும் விசாரணைகளும் தேடலும் என நகரும் எமோஷனல் க்ரைம் த்ரில்லர் படம்.

1. Charlie Chopra & The Mystery Of Solang Valley (Hindi) SonyLIV - Sep 27

Charlie Chopra & The Mystery Of Solang Valley
Charlie Chopra & The Mystery Of Solang Valley SonyLIV

விஷால் பரத்வாஜ் இயக்கியிருக்கும் இந்தி சீரிஸ் `Charlie Chopra & The Mystery Of Solang Valley'. அகதா கிரிஸ்டி எழுதிய நாவலின் சீரிஸ் வடிவமே இது. சார்லி தெரிந்து கொள்ளும் ரகசியங்களும், அவனுக்கு வரும் ஆபத்துகளும் என்ன? இதுதான் கதை

2. Hostel Daze S4 (Hindi) Prime - Sep 27

Hostel Daze
Hostel DazePrime

நான்காவது சீசனாக வரும் இந்தி சீரிஸ் `Hostel Daze'. ஒரு பொறியியல் கல்லூரி, அங்கு இருக்கும் நான்கு நண்பர்கள் அவர்களை சுற்றி நடக்கும் சம்பவங்களே இதன் கதை.

3. Baba Paraak (Tamil) YouTube - Sep 29

Baba Paraak
Baba ParaakYoutube

சிவ சாரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் சீரிஸ் `பாபா பராக்’. லாக்டவுன் காலகட்டத்தில் ஒரு வீட்டுக்குள் வசிக்கும் சில நண்பர்கள், அவர்கள் சந்திக்கு சிக்கல்களைப் பற்றி சொல்லும் காமெடியான சீரிஸ்.

4. Kumari Srimathi (Telugu) Prime - Sep 28

Kumari Srimathi
Kumari SrimathiPrime

கோம்தேஷ் இயக்கத்தில் நித்யாமேனன் நடித்திருக்கும் தெலுங்கு சீரிஸ் `Kumari Srimathi'. தனது பூர்வீகவீட்டை மீட்கும் லட்சியத்தில் இருக்கிறார் ஸ்ரீமதி. அதற்கான பணத்தை சம்பாதிக்க ஊருக்குள் ஒரு மதுபானக் கூடத்தை திறக்க முடிவு செய்கிறார். அதற்கு வரும் எதிர்ப்புகளை ஸ்ரீமதி எப்படி சமாளிக்கிறார் என்பதே கதை.

5. Papam Pasivadu (Telugu) Aha - Sep 29

Papam Pasivadu
Papam PasivaduAha

லலித் குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கு தெலுங்கு சீரிஸ் `Papam Pasivadu'. க்ராந்திக்கு எல்லா விஷயத்திலும் குழப்பம். எதை தேர்ந்தெடுப்பது என்பதில் குழப்பம். அவருக்கு ஒரு பெண்மேல் காதல் வருகிறது. இதன் பின் நடப்பவை என்ன என்பதே கதை.

6. Choona (Hindi) Netflix - Sep 29

Choona
ChoonaNetflix

புஷ்பேந்திரநாத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தி சீரிஸ் `Choona’. முன்பின் பரிட்சயம் இல்லாத சிலர், தங்களுடைய எதிரி ஒருவன் தான் எனத் தெரிந்து கொள்கிறார்கள். அந்த எதிரியிடம் கொள்ளையடிக்க திட்டமிடுகிறார்கள். பின்பு என்ன ஆகிறது என்பதுதான் கதை.

7. Gen V (English) Prime - Sep 29

`தி பாய்ஸ்’ சீரிஸின் ஸ்பின் ஆஃபாக உருவாகியிருக்கிறது `Gen V’. முதல் தலைமுறை சூப்பர் ஹீரோஸ் எப்படி உருவானார்கள், காம்போண்ட் வி எப்படி அதற்கு உதவியது என்பதைப் பற்றி எல்லாம் சொல்லப் போகிறது இந்த சீரிஸ்.

8. வெஸ் ஆண்டர்சன்

The Wonderful Story of Henry Sugar
The Wonderful Story of Henry Sugarnetflix

The Wonderful Story of Henry Sugar (English) Netflix - Sep 27, The Swan (English) Netflix - Sep 28, The Ratcatcher (English) Netflix - Sep 29, Poison (English) Netflix - Sep 30 என வெஸ் ஆண்டர்சன் இயக்கத்தில் நான்கு குறும்படங்கள் வெளியாகின்றன.

9. Tumse Na Ho Payega (Hindi) Hotstar - Sep 29

Tumse Na Ho Payega
Tumse Na Ho PayegaHotstar

அபிஷேக் சின்ஹா இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தி படம் `Tumse Na Ho Payega’. தொழிலதிபராக விரும்பும் ஒரு இளைஞன் சந்திக்கும் பிரச்சனைகளே படத்தின் கதை.

10. Reptile (English) Netflix - Sep 29

Reptile
ReptileNetflix

கிராண்ட் சிக்னர் இயக்கத்தில் உருவாகியிருகும் படம் 'Reptile’. நிக்கோலஸ் என்ற டிடெக்டிவ் விசாரிக்கும் ஒரு கொலைவழக்கு தான் படத்தின் கதை.

11. Gandeevadhari Arjuna (Telugu) Netflix - Sep 24

Gandeevadhari Arjuna
Gandeevadhari Arjuna netflix

பிரவீன் சத்தாரு இயக்கத்தில் உருவான தெலுங்குப் படம் `Gandeevadhari Arjuna'. லண்டனில் நடக்கும் மாநாட்டில் அமைச்சர் கலந்து கொள்ள வேண்டும். ஆனால் அவர் உயிருக்கு ஆபத்து. எனவே அவரை பாதுகாக்க ஹீரோ நியமிக்கப்படுகிறார். இதன் பிறகு வரும் பிரச்சனைகள் என்ன என்பதே படம்.

12. RDX - Robert Dony Xavier (Malayalam) Netflix - Sep 24

RDX
RDXnetflix

நகாஸ் ஹிதயந்த் இயக்கத்தில் உருவான மலையாளப்படம் `RDX'. ராபர்ட், டோனி, சேவியர் இந்த மூவரும் ஒரு கும்பலுடன் மோதுகிறார்கள். அது பின்பு அவர்களது வாழ்வை பாதிக்கிறது. அதை சரி செய்ய என்ன செய்கிறார்கள் என்பதே கதை.

13. Adiye (Tamil) SonyLIV - Sep 29

Adiye
AdiyeSonyLIV

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் - கௌரி நடித்த படம் `அடியே’. தனது காதலிக்காக ஆல்டர்னேட் யுனிவர்ஸ் செல்லும் காதலனைப் பற்றிய கதை.

14. Agent (Telugu) SonyLIV - Sep 29

Agent
AgentSonyliv

சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் அகில், மம்மூட்டி நடித்த தெலுங்குப் படம் `Agent’. உளவாளி ஒருவனுக்கு கொடுக்கப்படும் மிஷன், அதில் வரும் ஆபத்துகள் இதுவே கதை.

15. King of Kotha (Malayalam) Hotstar - Sep 29

King of Kotha
King of KothaHotstar

அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் உருவான மலையாளப் படம் ` King of Kotha'. கொத்தாவில் அட்டகாசம் செய்யும் இந்நாள் கேங்க்ஸ்டரை ஒழிக்க, முன்னாள் கேங்க்ஸ்டர் திரும்ப வருகிறார். அதன் பின் நடக்கும் அடிதடிகளே கதை.

16. Iraivan (Tamil) - Sep 28

Iraivan
Iraivan

அஹமத் இயக்கத்தில் ஜெயம் ரவி, ராகுல் போஸ், நயன்தாரா நடித்திருக்கும் படம் `இறைவன்’. ஒரு சைக்கோ கொலைகாரனை பிடிக்க முயற்சிக்கும் போலீஸின் கதை தான் படம்.

17. Chandramukhi 2 (Tamil) - Sep 28

Chandramukhi 2
Chandramukhi 2

பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்திருக்கும் படம் `சந்திரமுகி 2’. ஒரு குடும்பத்திற்கு தொடர்ச்சியாக பல பிரச்சனைகள், எனவே குலதெய்வ வழிபாட்டுக்காக செல்கிறார்கள். அங்கு எதிர்பாராத விதமாக நடக்கும் அமானுஷ்யங்களும், அதற்கான தீர்வும் தான் படம்.

18. Chithha (Tamil) - Sep 28

Chithha
Chithha

எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த், நிமிஷா நடித்திருக்கும் படம் `சித்தா’. ஒரு குற்றச்சம்பவம், அதைத் தொடர்ந்து நடக்கும் விசாரணைகளும் தேடலும் என நகரும் எமோஷனல் க்ரைம் த்ரில்லர் படம்.

19. Skanda (Telugu) - Sep 28

Skanda
Skanda

போயபட்டி ஸ்ரீனு இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடித்திருக்கும் தெலுங்குப் படம் `Skanda ’. போயபட்டி படங்களில் எப்போதும் ஒரே கதைதான். ஹீரோவுக்கு ஃபைட்டர்ஸை பறக்கவிடவும், ரத்தத்தை தெறிக்கவிடவும் காரணம் தேவை. அந்த காரணம் மட்டும் படத்துக்குப் படம் மாறுபடும்.

20. Kannur Squad (Malayalam) - Sep 28

Kannur Squad
Kannur Squad

மம்மூட்டி நடிப்பில் உருவாகியிருக்கும் மலையாளப்படம் `Kannur Squad'. ஒரு கிரிமினல் கேங்கைப் பிடிக்க முயற்சி செய்யும், போலீஸ் குழுவின் தேடல்தான் படத்தின் கதை.

21. Baanadariyalli (Kannada) - Sep 28

Baanadariyalli
Baanadariyalli

ப்ரீத்தம் கப்பி இயக்கத்தில் கணேஷ் நடித்திருக்கும் கன்னடப்படம் `Baanadariyalli'. காதலைப் பற்றிய படமாக உருவாகியிருக்கிறது.

22. Fukr3y (Hindi) - Sep 28

Fukr3y
Fukr3y

ம்ரிக்தீப் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தி படம் `Fukr3y'. முந்தைய இரண்டு பாகங்கள் போலவே இதிலும், ஒரு நண்பர்கள் குழு பிரச்சனை ஒன்றில் மாட்டுகிறது, அவர்கள் அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே கதை.

23. The Vaccine War (Hindi) - Sep 28

The Vaccine War
The Vaccine War

விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்திப் படம் `The Vaccine War'. கொரோனாவை முறியடிக்கும் மருந்தை கண்டுபிடித்தது பற்றிய படமாக உருவாகியிருக்கிறது.

24. Saw X (English) - Sep 28

Saw X
Saw X

கெவின் இயக்கதில் உருவாகியிருக்கும் படம் `Saw X'. உலகம் முழுக்க புகழ்பெற்ற Saw பட சீரிஸின் பத்தாவது பாகம். இந்த பாகத்தில் யார் அந்த சீரியல் கில்லர், யாரை எல்லாம் கொல்கிறார்? எதற்காக கொல்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

25. Peddha Kapu 1 (Telugu) - Sep 29

Peddha Kapu 1
Peddha Kapu 1

ஸ்ரீகாந்த் அடாலா இயக்கத்தில் உருவாகியிருக்கும் தெலுங்குப் படம் `Peddha Kapu 1'. சாதிய பிரச்சனைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம்.

26. The Creator (English) - Sep 29

The Creator
The Creator

காரெத் எட்வர்ட்ஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `The Creator'. மனிதர்களுக்கும் - ரோபோக்களுக்கும் இடையே சண்டை நடக்கும் காலகட்டம். இதை நிறுத்த யார், என்ன செய்கிறார்கள் என்பதுதான் கதை.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com