பரீட்சை எழுதப்போன ‘பாபநாசம்’ நாயகி

பரீட்சை எழுதப்போன ‘பாபநாசம்’ நாயகி

பரீட்சை எழுதப்போன ‘பாபநாசம்’ நாயகி
Published on

பரீட்சை எழுதுவதற்காக நடிப்பில் இருந்து ஓய்வு எடுக்க இருப்பதாக நடிகை நிவேதிதா தாமஸ் தெரிவித்துள்ளார்.

சமுத்திரக்கனியின் ‘போராளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமா கரைக்கு ஒதுங்கியவர் நிவேதிதா தாமஸ். அதனை அடுத்து அவர் கமல்ஹாசனின் ‘பாபநாசம்’ படத்தில் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அந்தக் கனமான பாத்திரம் அவரது நடிப்பிற்கு பெரிய பெயரை சம்பாதித்துக் கொடுத்தது. அவர் தற்போது ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளிவர உள்ள ‘ஜெய் லவகுசா’வில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நிவேதா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில், “என்னுடைய ரசிகர்கள் எல்லோரும் உங்களது அடுத்த படம் என்ன  என்று கேட்கிறார்கள். நான் ‘ஜெய் லவகுசா’வில் நடித்துள்ளேன். அதற்கு பிறகு நான் எனது பரீட்சைக்கு படிப்பதற்காக ஓய்வு எடுக்க இருக்கிறேன். மேலும் சில கதைகளை ஒரு வரி மட்டும் கேட்டுள்ளேன். என் கல்லூரி பரீட்சை எழுதி முடித்த பின் அதில் நடிக்க உள்ளேன்” என்று கூறியுள்ளார்.

பரீட்சைக்காக பட வாய்ப்பை விட்டுக் கொடுத்திருக்கும் அவரது மனப்பான்மைக்கு எல்லோரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com