தொழிலதிபரை மணக்கும் நிவேதா.. ஆண்டின் இறுதியில் டும்டும்டும்.. வாழ்த்து மழையில் காதலர்கள்...!
தொழிலதிபரை மணமுடிக்கிறார் நிவேதா பெத்துராஜ். யார் அந்த தொழிலதிபர் ராஜ் ஹித் இப்ரான்?...
அடியே அழகே... என் அழகே அடியே... பேசாம நூறு நூறா கூறு போடாத... 2016 - 17 காலகட்டத்தில் இந்த பாடலை அதிகம் கேட்டிருப்போம். ஒரு நாள் கூத்து படத்தில் இடம்பெற்ற இந்த பாடல் ஒன்றே போதும் நிவேதா பெத்துராஜ் யாரென சொல்ல. அறிமுக படத்தில் வெளியான இந்த பாடல் மூலம் பிரபலமான நிவேதா பெத்துராஜ், கோலிவுட்டில் கைகொடுக்காவிட்டாலும், தெலுங்கு திரையுலகம் இவருக்கு கைத்தட்டல்களை பெற்றுக்கொடுத்துள்ளது. தெலுங்கு ஸ்டார் அல்லு அர்ஜுனுடன் நிவேதா பெத்துராஜ் நடித்த அலா வைகுண்டபுரம்லோ நல்ல வரவேற்பை பெற்றதால், தெலுங்கு படங்களிலேயே நிவேதா கவனம் செலுத்தி வருவதாக சொல்லப்படுகிறது.
மதுரை பொண்ணான நிவேதா தற்போது துபாய் பையனை மணக்க இருக்கிறார். இதுகுறித்த அறிவிப்பை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் நிவேதா. அதில் டூ மை நவ், அண்ட் ஃபார் எவர் என பதிவிட்டுள்ளனர். இந்த ஆண்டு இறுதியில் தனது காதலனை மணக்க இருப்பதாக நிவேதா அறிவித்துள்ள நிலையில், இருவருக்கும் பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
துபாயைச் சேர்ந்தவர் ராஜ்ஹித் இப்ரான். கார்கள் மீது ஆர்வம் கொண்ட ராஜ்ஹித் இப்ரான், கார் ரேஸ்களில் கவனம் செலுத்தி வரும் நிவேதாவை மணக்க உள்ளார். இவர்களது திருமணம், குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் எளிமையாக இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. கல்யாண தேதியை அதிகாரப்பூர்வமாக நிவேதாவே அறிவிப்பார் என்றும் சொல்லப்படுகிறது.