வெளியானது பீஸ்ட் படத்தின் புதிய ஸ்டில்!

வெளியானது பீஸ்ட் படத்தின் புதிய ஸ்டில்!

வெளியானது பீஸ்ட் படத்தின் புதிய ஸ்டில்!
Published on

ஏப்ரல் 13 அன்று வெளியாக இருக்கும் நடிகர் விஜய்யின் “பீஸ்ட்” திரைப்படத்தின் இதுவரை வெளியாகாத புதிய ஸ்டில் ஒன்றை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் “பீஸ்ட்”. ஏப்ரல் 13 ஆம் தேதி பீஸ்ட் திரைப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. செல்வராகவன், பூஜா ஹெக்டே, ரெடின் கிங்ஸ்லி, ஜார்ன் சுர்ராவ், VTV கணேஷ், அபர்ணா தாஸ், ஷைன் டாம் சாக்கோ ஆகிய பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். இதுவரை அனிருத் இசையில் இரண்டு பாடல்கள் வெளியாகி உள்ளன. முதல் பாடலான 'அரபு குத்து' யூடியூப்பில் 232 மில்லியன் பார்வைகளைப் பெற்றது. சமீபத்தில் வெளியான இரண்டாவது சிங்கிள் 'ஜாலி ஓ ஜிம்கானா' ஏற்கெனவே யூடியூப்பில் 29 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் தயாரிப்பு நிறுவனம் படத்தின் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுவரை வெளியாகாத புதிய ஸ்டில் ஒன்றை படக்குழு சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது. இந்த ஸ்டில்லில் விஜய் கருப்பு நிற ஸ்வெட்டரில் துப்பாக்கி ஏந்தியபடி காட்சியளிக்கிறார். இதற்கு முன்பு போக்கிரி, துப்பாக்கி மற்றும் தெறி விளம்பர போஸ்டர்களில் விஜய் துப்பாக்கி ஏந்தியபடி புகைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்த மூன்று பிளாக்பஸ்டர் படங்களின் அதிரடியை போல “பீஸ்ட்” இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com