
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படம், ‘விவேகம்’. காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், இந்தி நடிகர் விவேக் ஓபராய் உட்பட பலர் நடிக்கின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் இன்டர்போல் ஏஜெண்டாக அஜீத் நடிக்கிறார் என்றும் அவர் உதவியாளராக அக்ஷ்ரா ஹாசன் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன், அஜீத்தின் சிக்ஸ்பேக் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டது. இப்போது உடல் முழுவதும் ரத்தக் காயத்துடன் அஜீத் நடந்துவருவது போன்ற புதிய படத்தைப் படக்குழு வெளியிட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன் தீவிரவாதிகள், மக்களைச் சுடுவது போலவும் பலர் உயிரிழந்து தரையில் கிடப்பது போலவும் விவேகம் படத்தின் புகைப்படங்கள் வெளியானது. இந்தப் புகைப்படம் அதன் தொடர்ச்சியானதாக இருக்கலாம் என ரசிகர்கள் கூறுகின்றனர்.