சேகர் கம்முலா இயக்கும் படத்தில் தனுஷ் உடன் கைகோர்க்கும் நாகர்ஜூனா! எகிறும் எதிர்பார்ப்பு

நடிகர் தனுஷ் நடிக்கும் ‘டி51’ படத்தில் நடிகர் நாகார்ஜூனா இணைந்து நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
dhanush, nagarjuna
dhanush, nagarjunapt web

நடிகர் தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப் படத்தில் பிரியங்கா மோகன், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் போன்றோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் இத்திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு இடைவிடாது நடந்து வருவதாகவும் இரண்டு வாரத்தில் படப்பிடிப்பு முடிவடைந்துவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Captain Miller Teaser
Captain Miller Teaser@Sathya Jyothi Films you tube

இந்நிலையில், தனது 50-வது படத்தை தனுஷே இயக்கி நடிக்கிறார். இதில் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன் உட்பட பலர் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதையடுத்து தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கும் படத்தில் நடிக்கிறார் தனுஷ். தலைப்பிடப்படாத இப்படம் ‘D51’ என அழைக்கப்படுகிறது.

இத்திரைப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் ஆகியுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இந்தப்படம் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் தனுஷூடன் இணைந்து நாகார்ஜூனா நடிக்கிறார் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நாகர்ஜூனாவின் பிறந்த நாளன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்து படக்குழு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com