Pisasu 2 release announcementX Page
சினிமா
மிஷ்கினின் பிசாசு 2 | ரிலீஸ் பற்றி வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
இயக்குநர் மிஷ்கினின் பிசாசு-2 திரைப்படம் வரும் மார்ச் மாதம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இயக்குநர் மிஷ்கினின் பிசாசு-2 திரைப்படம் மார்ச் மாதம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
X Page
பிசாசு-2 படத்தில் ஆண்ட்ரியா நாயகியாகவும், விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். க்ரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்த படத்தை, சில காரணங்களால் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது. அவை தீர்ந்ததை அடுத்து, வரும் மார்ச் மாதத்தில் படம் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
முன்னதாக 2014-ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்தப் படம் பிசாசு. தமிழ் சினிமா ரசிகர்கள் பார்த்து பழகிய திகில் கதையை வித்தியாசமான முறையில் படமாக்கி வெற்றியடைந்தார் மிஷ்கின்.