\
முத்தையா முரளிதரன் படத்தில் நடிப்பது பெருமையாக உள்ளது:  அப்டேட் கொடுத்த விஜய் சேதுபதி

முத்தையா முரளிதரன் படத்தில் நடிப்பது பெருமையாக உள்ளது: அப்டேட் கொடுத்த விஜய் சேதுபதி

முத்தையா முரளிதரன் படத்தில் நடிப்பது பெருமையாக உள்ளது: அப்டேட் கொடுத்த விஜய் சேதுபதி
Published on

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை படத்தில் நடிக்கவிருக்கும் விஜய் சேதுபதி, அப்படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று தெரிவித்திருக்கிறார்.

உலகில் ஃபுட்பால் விளையாட்டுக்கு இணையாக அதிக ரசிகர்களை கொண்ட விளையாட்டு என்றால், அது கிரிக்கெட்தான். கிரிக்கெட் வரலாற்றில் சுழற்பந்து குறித்து பேசினால், அதில் தவிர்க்க முடியாத: தவறாமல் இடம்பெறும் பெயர் ’முத்தையா முரளிதரன்’. தனது சுழற்பந்தால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி கெத்து காட்டியவர்.

அவரின், வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக கடந்த வருடம் தகவல்கள் வெளியானது. இப்படத்தில் ‘முதலில் நடிக்க மறுத்தேன்; பின்பு ஒத்துக்கொண்டேன்’ என்று தெரிவித்திருந்தார், விஜய் சேதுபதி.

இந்நிலையில், இப்படத்தின் போஸ்டரை இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ”இந்த மைல்கல் படத்தில் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமையாக உள்ளது. படத்தின் அப்டேட் விரைவில் வரும்’ என்று தெரிவித்திருக்கிறார்

முன்னதாக முத்தையா முரளிதரன் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com