\
திருவள்ளூர்: எஸ்.பி பாலசுப்பிரமணியம் நினைவிடத்தில் இசை அஞ்சலி

திருவள்ளூர்: எஸ்.பி பாலசுப்பிரமணியம் நினைவிடத்தில் இசை அஞ்சலி

திருவள்ளூர்: எஸ்.பி பாலசுப்பிரமணியம் நினைவிடத்தில் இசை அஞ்சலி
Published on

பின்னணி பாடகர் எஸ்பிபி பாலசுப்பிரமணியம் நினைவு தினத்தையொட்டி நினைவு இடத்தில் இசை அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னணி பாடகர் எஸ்பிபி கடந்த ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் பகுதியில் உள்ள அவரது பண்ணை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.இன்று அவரது முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது குடும்பத்தினர் நினைவு நாளை கொண்டாடினர்.

அப்போது பொது மக்களுக்கு கொரோனாவை காரணம் காட்டி அனுமதி இல்லை என தெரிவித்தனர். இந்த நிலையில், எஸ்பிபி-க்கு நினைவிடத்தில் இசை அஞ்சலி செலுத்தப்பட்டது. பாடகர்கள் முகேஷ், ஆதவன், மீனாட்சி சீனிவாசன் உள்ளிட்டோர் இசை அஞ்சலி செலுத்தினர். குறைந்த அளவில் கூட்டம் இருந்ததால் கொரோனா விதிமுறைகளின்படி பொது மக்கள் அஞ்சலிக்கு அனுமதிக்கப்பட்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com