\
Samantha's Engal Thangam Review
SamanthaEngal Thangam Review

லேடி `பாட்ஷா'வாக சமந்தா மிரட்டினாரா? `எங்கள் தங்கம்' எப்படி? | Engal Thangam Review | Samantha

குடும்பத்தை மையப்படுத்திய ஒரு ஆக்‌ஷன் படத்தை எழுதி இருக்கிறார் ராஜ் நிடிமொரு, அதனை முடிந்த அளவு சுவாரஸ்யமாக எடுக்க முயற்சித்திருக்கிறார் நந்தினி ரெட்டி.
Published on
லேடி `பாட்ஷா'வாக சமந்தா மிரட்டினாரா? `எங்கள் தங்கம்' எப்படி?(2 / 5)

காதல் கணவனின் குடும்பத்துக்குள் போகும்போது, குறுக்கே வரும் கடந்த காலம்!

சொர்ணா (சமந்தா) காதலித்துத் திருமணம் செய்துகொண்ட கணவர் அனிருதின் (திக்நாத்) தங்கை திருமணத்துக்காக அவர் வீட்டுக்குச் செல்கிறார். அனிருத் தன் வீட்டை எதிர்த்து திருமணம் செய்துகொண்டார் என்பதால், அக்குடும்பத்து நபர்கள் யாரும் அனி - சொர்ணா தம்பதியை வீட்டில் யாரும் கண்டு கொள்ளவில்லை. சிறுவயது முதலே ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்த சொர்ணாவுக்கு, இக்குடும்பத்தில் ஒரு நபராக வேண்டும் என ஆசை. சமையல், கோலம், வீட்டுவேலை என அதற்காக பல மிஷன்களை செய்து மெல்லமெல்ல அந்தக் குடும்பத்தின் அங்கீகாரத்தைப் பெறுகிறார். அந்தச் சமயத்தில் சொர்ணாவின் கடந்தகாலம் அவரைத் தேடி வருகிறது. அந்தக் குடும்பத்துக்கு அதனால் ஆபத்து எனும்போது, காப்பாற்ற சொர்ணா என்ன முடிவு எடுக்கிறார் என்பதே `மா இன்டி பங்காரம்/எங்கள் தங்கம்' மீதிக்கதை.

Samantha
Samantha

’பாட்ஷா’ பட டெம்`பிளேட்'ஐ திருப்பிப் போட்டு லேடி வெர்ஷனாக எடுத்தால் அதுவே `மா இன்டி பங்காரம்'. குடும்பத்தை மையப்படுத்திய ஒரு ஆக்‌ஷன் படத்தை எழுதி இருக்கிறார் ராஜ் நிடிமொரு, அதனை முடிந்த அளவு சுவாரஸ்யமாக எடுக்க முயற்சித்திருக்கிறார் நந்தினி ரெட்டி.

Samantha's Engal Thangam Review
ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன்! | Shankar | Arijith Shankar | Lover Boy

சொர்ணாவாக, சமந்தா சாந்தமான குடும்பப் பெண்ணாகவும், அதிரடியான மாஸ் காட்டும் ரோலிலும் பக்காவாகப் பொருந்துகிறார். நான் சமைக்கவா, நான் பாட்டு பாடவா என ஒவ்வொன்றிலும் தன்னை நிரூபிக்க முயல்வதும், எதிர்த்து வரும் அடியாட்களை துவம்சம் செய்வதும் என இருவேறு விதத்திலும் கவனிக்க வைக்கிறார் சமந்தா. இதற்கடுத்து கவர்வது சொர்ணாவின் தோழியாக வரும் கிரண்மயி பாத்திரத்தில் நடித்த மஞ்சுஷா. சமந்தாவின் ஒவ்வொரு டார்ச்சரையும் பொறுத்துக் கொண்டு புலம்புவது, "கடலைப் பருப்புக்கும், உளுத்தம் பருப்புக்கும்கூட உனக்கு வித்தியாசம் தெரியாது. ஆனா இதெல்லாம் நல்லா தெரியுது" என அவர் அடிக்கும் கவுண்டர்கள் அனைத்தும் அசத்தல்.

Samantha
Samantha

துணைப் பாத்திரங்களில் வரும் திகந்த், கௌதமி, ஆனந்த், ஸ்ரீமுகி என துணைப் பாத்திரங்கள் கொடுத்த வேலையைச் சரியாக முடித்திருக்கிறார்கள். வில்லன் ரோலில் வரும் குல்ஷன் தேவய்யா இயல்பாக வில்லத்தனத்தைக் காட்ட முயல்கிறார்.

டெக்னிகலாக படத்தின் பலம் சந்தோஷ் நாராயணனின் பாடல்களும் பின்னணி இசையும்தான். ஒரு திருமண வீட்டின் வைபை நமக்கு கடத்தும் Thassadiya பாடல் ஒருபுறம் என்றால், ரெட்ரோ டைப் மாஸ் பின்னணி இசையில் ஆக்‌ஷன் காட்சிகளை எலிவேட் செய்வது என அசத்தி இருக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு முடிந்தவரை அந்த கல்யாண வீட்டின் பரபரப்பையும், குடும்பத்துக்கு வரும் ஆபத்தையும் கச்சிதமாக பதிவு செய்திருக்கிறது. கலை இயக்குநர் உல்லாஸ் ஹைதருக்கு ஒரு சபாஷ்.

இப்படத்தின் குறைகள் எனப் பார்த்தால், எந்த இடத்திலும் வேகமெடுக்காமல், மிக மெதுவாக நகர்வதுதான். புதிய கதையோ, எதிர்பாராத திருப்பங்களோ இல்லை என்பது ஒரு பக்கம், ஆமை வேகத்தில் நகரும் திரைக்கதை மறுபக்கம் என பெரிய சலிப்பைத் தருகிறது படம். சமந்தாவுக்குச் சொல்லப்படும் முன் கதையும் அத்தனை அழுத்தமானதாக இல்லை. குல்ஷன் தேவாய்யா மூலம் வரும் ஆபத்துகளும் நமக்கு எந்த பதைபதைப்பையும் ஏற்படுத்தவில்லை. எனவே, அந்த வில்லன் ரோல் கதையில் எந்த தாக்கமும் இல்லாமல் வந்து போகிறது. பெண் சார்ந்து நடக்கும் உழைப்புச் சுரண்டலை, சமத்தான குடும்பத்துப் பெண் என்ற பெயரில் ரொமான்டிசைஸ் செய்யப்படுவது பற்றிய மேலோட்டமாக பேசிவிட்டு நகர்ந்ததும் பெரிய ஏமாற்றம்.

Samantha
Samantha

மொத்தத்தில் திரைக்கதையில் இன்னும் வேகம் கூட்டி இருந்தால் அட்டகாசமான ஆக்‌ஷன் படமாக கவர்ந்திருக்கும் இந்த `மா இன்ட்டி பங்காரம்'.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com