\
ramayana
ramayanaramayana part 1

மிரட்டலான கிராஃபிக்ஸ், சுவாரஸ்யமான திரைக்கதை... படமாக ஈர்க்கிறதா ராமாயணா? #Ramayana

ராவணன் பிறந்த கதையும், ராமனின் பிறப்பின் பலனையும் சொல்வதே ராமாயணம் பகுதி 1
Published on: 
ராமாயணம் பகுதி 1(3 / 5)

தேவர்களுக்கும் அசுரர்களுக்குமான போரில் இந்திரன், அசுரர்களை வீழ்த்தி குபேரனை இலங்கையின் அரசனாக மாற்றி அசுரர்களை அடிமையாக மாற்றுகிறார். தன் மக்களை வறுமையிலிருந்து மீட்டு, அதிகாரத்தை அடைய வேண்டும் என தவம் இருக்கும் தஷாணன், பிரம்மனிடம் அதீத சக்திகளை பெற்று இராவணனாக மாறி (யஷ்) இலங்கையின் அரசனாக முடி சூடுகிறார். தேவர்களை அழித்து மூவுலகையும் ஆள நினைக்கும் ராவணன் தொடர்ச்சியாக பலரை கொள்கிறார்.

இவரை அழிக்க விஷ்ணுவின் அவதாரமாக தசரத மன்னனுக்கு மகனாக பிறக்கிறார் ராமன் (ரன்பீர் கபூர்). உலகையே ஆள நினைக்கும் ராவணனையும், தான் பிறந்த பலன் என்ன என்பதை தேடும் ராமனையும் அறிமுகம் செய்யும் படமாக நீள்கிறது இந்த ராமாயணம் பகுதி 1.

500 Jewels, 18 Months, 3 Kingdoms: Ramayana's Grand Designs
Sai PallaviRamayana Trailer you tube Screenshot

நாம் பலமுறை வெவ்வேறு வடிவங்களில் கேட்டு, பார்த்த அதேகதை தான். ஆனால் இம்முறை பிரம்மாண்ட காட்சிகளை மிக நேர்த்தியாகவும், ஒவ்வொரு தருணங்களையும் சுவாரஸ்யமாகவும் கொடுத்து கவனத்தை ஈர்க்கிறார் இயக்குநர் நிதேஷ் திவாரி.

ராமராக வரும் ரன்பீர் கபூர் அமைதியான தோற்றம், கம்பீரமான உடல்மொழி என கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை கொடுக்க முயற்சிக்கிறார். ஆனாலும் எல்லா காட்சிகளிலும் ஒரே மாதிரியான முக பாவனைகள் இருப்பது சற்று உறுத்தல். சீதா பாத்திரத்தில் சாய் பல்லவி. காதலும், வீரமும் வெளிப்படுத்தும் பாத்திரத்தில் அழகாக பொருந்துகிறார். இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் ராவணனாக வரும் யாஷ். உக்கிரமாக சண்டையிடுவது, நாட்டை ஆள நினைக்கும் எண்ணத்தை வெளிப்படுத்துவது, பத்து தலை ராவணனாக வித்தியாசம் காட்டுவது என பல காட்சிகளில் அசத்துகிறார்.

ramayana part 1
ramayana part 1Prime Focus Studios/Monster Mind Creations/DNEG

இந்தப் படத்தின் மிகப்பெரிய பலமே அதன் பிரம்மாண்டமான காட்சியமைப்புதான். அயோத்தி மற்றும் இலங்கையின் அரண்மனைகள், போர்க்களக் காட்சிகள், ராவணனின் அறிமுகம் மற்றும் சண்டைக் காட்சிகள், ஜடாயு – ராவணன் மோதல், வனப்பகுதிகளின் காட்சியமைப்பு என பல காட்சிகள் தரமான கிராஃபிக்ஸ் காட்சிகள் நம்மை வியப்புக்குள்ளாக்குகின்றன. ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்திருகின்றனர். பின்னணி இசை படத்தின் பிரம்மாண்டத்திற்கு உறுதுணையாக இருந்தாலும், சில காட்சிகளில் ரஹ்மானின் சில முந்தைய பட இசையை நினைவுபடுத்துகின்றன.

இந்தப் படத்தின் குறைகள் எனப்பார்த்தால் சில காட்சிகள் மிகவும் நாடகத்தனமான பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளன. கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளுக்கு போதிய முக்கியத்துவம் இல்லை என்பதும் ஒரு குறை. ராமர் – சீதை இடையேயான உணர்வுப்பூர்வமான காட்சிகள் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கலாம். சில க்ரீன்மேட் காட்சிகள், இன்னும் நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கலாம்.

மொத்தத்தில் குறைகள் இருந்தாலும் இந்திய சினிமாவின் பிரம்மாண்டமான முயற்சிகளில் ஒன்றாக ராமாயணம் – பார்ட் 1 அமைந்திருக்கிறது. மிகப் பரிட்சயமான கதையை சுவாரஸ்யமாக சொன்ன விதம், இப்படத்தை ஒரு சிறப்பான திரையரங்க அனுபவமாக மாற்றுகிறது.

ramayana
ஓடிடியில் அதிகம் பார்க்கப்படும் ‘பத்தா’.. உலக அளவில் டிரெண்டிங்! எத்தனையாவது இடம் தெரியுமா?