\
Delivery Boy Review
Delivery Boy ReviewDelivery Boy

ஒரே படத்தில் ரெண்டு கதையா? | Delivery Boy Review

ஹீரோவின் நன்றியுணர்வை மைப்படுத்திய படமே Delivery Boy
Published on: 
Delivery Boy Review(1.5 / 5)

கோவையில் Food Delivery செய்யும் வேலையில் இருக்கிறார் சிவா (லியோ சிவகுமார்). ஒரு பக்கம் காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்ற முயற்சி, இன்னொரு பக்கம் தேன்மொழியுடன் (பிரிகிடா) காதல், அம்மா லட்சுமி (ராதிகா சரத்குமார்) மீது மிகுந்த பாசம் என அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். அடிக்கடி சென்னைக்கு சென்று கௌதம் (நிரஞ்சன்) என்பவரை சந்திக்கும் முயற்சிகளையும் எடுக்கிறார். கௌதம் - சிவா இடையேயான தொடர்பு என்ன? அவரை சிவா சந்தித்த பின் என்ன நடக்கிறது என்பதை எல்லாம் சொல்கிறது Delivery Boy படத்தின் மீதிக்கதை.

லீட் ரோலில் வரும் லியோ சிவகுமார் தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை கொடுக்க முயற்சிக்கிறார். ஆனால் அது போதாது இன்னும் தீவிரமான முயற்சி வேண்டும் என்பது ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. ராதிகா சரத்குமாருக்கு சில காட்சிகள் தான் என்றாலும் தன் திறமையான நடிப்பால் ஸ்கோர் செய்கிறார். காளி வெங்கட், போஸ் வெங்கட், பிரிகிடா, உதயா உள்ளிட்ட துணை நடிகர்களின் நடிப்பு படத்திற்கு உதவியிருக்கிறது.

சுந்தரமூர்த்தி கே.எஸ். இசையில் பாடல்கள் ஓக்கே ரகம். ஆனால் பின்னணி இசை இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். அசோக்குமார் ராஜ் மற்றும் பிரசன்னா எஸ். குமாரின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது. பீனிக்ஸ் பிரபுவின் சண்டைக்காட்சிகளும் குறிப்பிடத்தக்கவை என்றாலும், இன்னும் சுருக்கமாக இருந்திருக்கலாம்.

இந்தப் படத்தின் மிகப்பெரிய பிரச்சனையே சரியாக எழுதப்படாத திரைக்கதைதான். நம்ப முடியாத அளவுக்கு கோ இன்சிடெண்ட்ஸ் இருப்பது கூட ஓகே. ஆனால், முதல் பாதி ஒரு கதையாகவும் இரண்டாம் பாதி இன்னொரு கதையாகவும் இருப்பது பெரிய மைனஸ். அதிலும் இரு பாதிகளிலும் சுவாரஸ்யம் என்பது துளியும் இல்லை. சில காட்சிகளில் லாஜிக் மீறல்கள் எட்டிப் பார்க்கின்றன. லியோ சிவகுமாரை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக மாற்றும் முயற்சி புரிகிறது. ஆனால் அதற்கு இன்னும் தன்னை தயார்படுத்திக்க கொள்ள வேண்டி இருக்கிறது.

மொத்தத்தில் தாய்ப்பாசம், மனிதநேயம், குற்றவுணர்ச்சி ஆகிய உணர்வுகளை மையமாக வைத்து ஒரு சுவாரஸ்யமான ஆக்ஷன் திரில்லரை கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர் நானி. திரைக்கதையில் உள்ள குறைகளை சரி செய்து, இன்னும் நல்ல மேக்கிங்கில் எடுத்திருந்தால்,ரசிக்கக்கூடிய திரைப்படமாக அமைந்திருக்கும் 'டெலிவரி பாய்'.

Delivery Boy Review
புதுமையான சீரியல் கில்லர் vs போலீஸ் கதை... ஸ்டைலிஷ் திரைக்கதையில் அசத்தும் ஜீத்து! | Scene Review