\
Nayanthara, Kavin's Hi Review
Nayanthara, KavinHi

ஜாலியான காதல் கதையாக கவர்கிறதா ஹாய்? | Hi Review | Nayanthara | Kavin

ஒரு ஜாலியான கதையாக `ஹாய்' படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் விஷ்ணு இடவன். படத்தோட முதல் பாதி முழுக்க, வசனங்கள், காட்சிகள் என எல்லாத்திலும் காமெடி, அது பெரும்பாலும் வொர்கும் ஆகி இருப்பதும் பெரிய ப்ளஸ்.
Published on

காதலை காப்பாற்ற நடக்கும் நாடகமும், அதனால் நடக்கும் கலாட்டாக்களுமே `ஹாய்'

மயில்சாமிக்கு (கவின்) காதல் தோல்வி, அதனை விட்டு வெளியே வரும் முன்பே வீட்டில் திருமணம் செய்ய சொல்லி டார்ச்சர் செய்ய ஊரைவிட்டு சென்னைக்கு வர்றார். தேவயாணி (நயன்தாரா) கட்டாய கல்யாணத்தில் இருந்து தப்பி சென்னைக்கு வருகிறார். ஒரே பில்டிங்கில் தங்கும் இந்த இருவருக்கும் நட்பு துளிர்க்கிறது. போக போக தேவயாணியின் பாசத்தை பார்க்கும் மயில்சாமிக்கு காதல் உருவாகிறது. காதலை சொல்லலாம் என நினைக்கும் போது, மயில் - தேவயாணி இருவரும் ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். அதிலிருந்து அவர்கள் தப்பித்தார்களா? மயிலின் காதல் என்ன ஆனது என்பதெல்லாம் தான் மீதிக்கதை.

ஒரு ஜாலியான கதையாக `ஹாய்' படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் விஷ்ணு இடவன். படத்தோட முதல் பாதி முழுக்க, வசனங்கள், காட்சிகள் என எல்லாத்திலும் காமெடி, அது பெரும்பாலும் வொர்கும் ஆகி இருப்பதும் பெரிய ப்ளஸ்.

Hi
Hi

நடிகர்களில் நயன்தாராவுக்கு ஒரு கலகலப்பான பாத்திரம். ரொம்ப நாள் கழித்து சிரித்த முகமாக வருகிறார் என்பதே நமக்கு ஒரு ஃபிரெஷ் ஃபீல் கொடுக்கிறது. குடும்ப அழுத்தங்களை நினைத்து வருந்துவது, கவின் செயல்களை கண்டு ரசிப்பது என தன்னுடைய ரோலை சிறப்பாகவே செய்கிறார். கோவை ஸ்லாங்கில் பல ஒன்லைனர் போட்டு சிரிக்க வைக்கிறார் கவின். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும்போதும், சுயநலத்துக்காக பொய் சொல்வதும் என இருவேறு மன ஓட்டங்களை அழகாக பிரதிபலிக்கிறார். துணை பாத்திரங்களில் வரும் பாக்யராஜ், ராதிகா, பிரபு எல்லாரும் சிறப்பான நடிப்பை கொடுக்கிறார்கள். நகரத்தில் இருக்கும் போது குரேஷி, கிராமத்தில் ஆதித்யா கதிர் என இருவரின் காமெடியும் படத்தை கலகலப்பாக்குகிறது.

ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு படத்தை மிகவும் கலர்ஃபுல்லாக கொடுத்திருக்கிறது. ஜென் மார்ட்டின் இசையில் ரசகுலா பாடல் சிறப்பு, பின்னணி இசையில் காமெடி + எமோஷன் கடத்தும் படி அமைந்துள்ளது. பிலோமின் ராஜின் எடிட்டிங்கும் படத்தை சுவாரஸ்யமாக கொடுக்க உதவி இருக்கிறது.

இந்தப் படத்தின் குறைகள் எனப் பார்த்தால் முதல் பாதி ரொம்ப சுவாரஸ்யமாக, காமெடியாக நகரும் படம், இரண்டாம் பாதியில எங்ககெங்கோ போகிறது. கவினுக்கு காதல் செட் ஆகவில்லை, நயனுக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை என தெரிவான விஷயங்களை பேசும் படம், இரண்டாம் பாதியில் தெளிவே இல்லாமல் போகிறது.

கவின் சொல்லக்கூடிய ஒரு பொய் பிரச்னையாகிறது, ஆனால் அந்த பொய்யயை ஏன் நயன்தாரா ஆதரிக்கிறார்? அதற்காக சொல்லப்படும் காரணம் மிகவும் பலவீனமாக இருக்கிறது. பிரபுவை வைத்து சொல்லப்படும் ஒரு எமோஷனலான விஷயமும், முக்கியமான காட்சி வரும் போது நீர்த்து போய் விடுகிறது.

மொத்தத்தில் இடைவேளைக்கு பிறகும் தெளிவான, சுவாரஸ்யமான காமெடிகள், வலுவான காட்சிகள் இருந்திருந்தால் இன்னும் ஜாலியான படமா இருந்திருக்கும் இந்த ஹாய்!

Nayanthara, Kavin's Hi Review
ரஜினிகாந்த் உடனான ’தர்மன்’ பட அனுபவம் எப்படி இருந்தது? அஸ்வத் மாரிமுத்து பேட்டி!!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com