Ken Karunaas
Ken KarunaasYouth

காதல் கலாட்டாவாக ஈர்க்கிறதா இந்த `யூத்'? | Youth Review | Ken Karunaas

மகன் என்ன ஆவான் என தந்தை நினைக்க, அவன் கலெக்டர் ஆவான் என தாய் நினைக்க, பிரவீன் மட்டும் `நான் வேற ஒண்ணு நினைக்கிறேன் பாஸ்' என காதலில் விழ துடியாய் துடிக்கிறார்.
Published on
காதல் கலாட்டாவாக ஈர்க்கிறதா இந்த `யூத்'?(2.5 / 5)

காதலுக்கு ஏங்கும் மாணவனின் காமெடியும், எமோஷனுமே `யூத்'

பிரவீன் (கென் கருணாஸ்) 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் ஜஸ்ட் பாஸ். அதையே பெரிதாக நினைத்துக் கொண்டாடும் தாயார் சரோஜாவுக்கு (தேவதர்ஷினி) மகன் என்றால் உயிர். ஆனால் அவரது தந்தை உன்னிகிருஷ்ணன் (சுராஜ் வெஞ்சாரமூடு) மகனின் அலட்சிய போக்கால் எப்போதும் எம்-டன் மோடில் இருக்கிறார். மேல்நிலைப் படிப்புக்குச் செல்லும் மகன் என்ன ஆவான் என தந்தை நினைக்க, அவன் கலெக்டர் ஆவான் என தாய் நினைக்க, பிரவீன் மட்டும் `நான் வேற ஒண்ணு நினைக்கிறேன் பாஸ்' என காதலில் விழ துடியாய் துடிக்கிறார்.

Youth
Youth

படிப்பில் கவனம் செலுத்தாமல் அடுத்தடுத்து மூன்று காதல். இந்த காதல்கள் அவருக்கு என்ன படிப்பினையை தந்தது? அவருக்கு காதல் கிடைத்ததா இல்லையா என்பதெல்லாம்தான் 'யூத்' பட கதை.

Ken Karunaas
இந்த ஸ்பை திரில்லரில் எது நிஜம்.. எது பொய்? - Dhurandhar The Revenge Review | Ranveer Singh

பதின்வயது பள்ளி மாணவனாக கென் கருணாஸ் தன்னைச் சிறப்பாக வெளிப்படுத்தி இயக்கியும் இருக்கிறார். அவரின் ஜாலியான உடல்மொழி, குறும்பு, நடனம் என அனைத்திலும் குறை வைக்காமல் அசத்துகிறார். தன்னுடைய நடவடிக்கைகள் தவறு என புரிந்துகொண்டு குற்ற உணர்ச்சி அடைவது, மனம் மாறுவது என உணர்வுப்பூர்வமான காட்சிகளிலும் சிறப்பாக நடித்துள்ளார். பள்ளி மாணவிகளாக மீனாட்சி தினேஷ், அனிஷ்மா அனில்குமார் ஆகியோருக்கு அழுத்தமான வேடம். மீனாட்சி ஜாலி காதலுக்கு கலர் சேர்க்க, அனிஷ்மா எமோஷனல் காதலுக்கு அழுத்தம் சேர்க்கிறார். க்யூட்டாக வந்து பின்னர் மாஸ் காட்டும் வேடத்தில் வரும் ப்ரியான்ஷி யாதவ் காட்சிகளும் சுவாரசியம் சேர்க்கிறது.

Youth
Youth

ஹீரோவின் பெற்றோர் வேடம் என்றாலும் படத்தில் மிக முக்கியமான ரோல் தேவதர்ஷினி - சுராஜ் நெஞ்சரமூடு ஜோடிக்கு. மகன் மீது கண்மூடித்தனமான அன்புவைக்கும் அம்மாக்களை அப்படியே பிரதிபலிக்கிறார் தேவதர்ஷினி. மகன் மீதான அன்பை வெளிக்காட்ட முடியாத தந்தையை தத்ரூபமாக காட்டுகிறார் சுராஜ். படிப்பு இல்லை என்பதால் தனக்கு நேர்ந்த அவமானங்களைச் சொல்லும் இடம் டச்சிங். சின்ன தமிழா, ஈஸ்வர் உள்ளிட்ட கென் & கேங், மீனாட்சி தினேஷின் தோழிகளாக வருபவர்கள், ஒன்சைடாய் காதலிக்கும் சீனியர் & குழு ஆகியோர் ஜாலி எபிசோடுக்கு உதவுகிறார்கள். இரண்டே காட்சிகள் என்றாலும் நளினி வரும் காட்சிகளில் நல்ல நடிப்பை கொடுத்திருக்கிறார்.

ஓர் இளைஞனின் வாழ்வில் நடக்கும் ஜாலி அத்தியாயங்கள்தான் படம் என்றாலும், படிப்பு எவ்வளவு அவசியம் என்பதை உணர்த்தும் வகையிலான காட்சிகள் சிறப்பு. அதிலும் `இதெல்லாம் நடந்த பின்னாலதான் அவன் படிப்பானா?' என சுராஜ் கேட்கும் இடம் நச். 

Youth
Youth

சிறிய வீடு, கென்னின் அறை, பள்ளிக்கூடக் காட்சிகள் என அனைத்து இடங்களையும் ’பளீச்’ என காட்டுகிறார் ஒளிப்பதிவாளர் விக்கி. ஜாலி, எமோஷன் என அனைத்தையும் பின்னணி இசையில் கடத்துகிறார் ஜிவி பிரகாஷ். பாடல்கள் ஆல்ரெடி ஹிட். படத்திலும் செம ஃபிட். அதிலும் ஷோபி நடனங்களை வடிவமைத்திருக்கும் விதம் செம துள்ளல். முதல் பாதி காமெடிக்கு, இரண்டாம் பாதி எமோஷனுக்கு எனக் கணக்குப் போட்டு காட்சிகளை அடுக்கி செண்டம் வாங்கியிருக்கிறார் படத்தொகுப்பாளர் நாஷ். 2014-16ஐ பிரதிபலிக்கும் விஷயங்களை படம் முழுக்க தூவி இருக்கிறார் கலை இயக்குநர் ராமு தங்கராஜ்

ஒரு பள்ளி மாணவன் அந்த வயதுக்கே உரிய காதல் ஆசைகளில் இருக்கிறன் என்பதுவரை ஓகே. ஆனால், தனக்கு யாரும் ஓகே சொன்னதில்லை. அதனால்தான் பார்க்கும் பெண்களிடம் எல்லாம் வழிகிறேன் என அதற்கு ஒரு நியாயம் சொல்வது, இடையிடையே உருவக்கேலிகள், பெண்களின் குரலைவைத்து கேலிகள் மற்றும் காதலை மறுப்பதால் பெண்ணை குற்றவாளியாக மாற்றும் படத்தின் தன்மை இதெல்லாம் சரியில்ல சிதம்பரம்.

இப்படியான டிசிப்ளின் குறைகள் இருப்பினும், ஒரு துறுதுறு மாணவனாக நம்மை கவரவே செய்கிறான் இந்த ’யூத்’.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com