ஈகோ, அகிம்சை, ஊர் பாசம்... தனுஷின் இட்லிகடை சொல்வது என்ன? | Idli Kadai Review | Dhanush
ஈகோ, அகிம்சை, ஊர் பாசம்... தனுஷின் இட்லிகடை சொல்வது என்ன? (2.5 / 5)
கிராமத்து ஹீரோவுக்கும், பணக்கார வில்லனுக்குமான ஈகோ மோதலே இட்லி கடை பட ஒன்லைன்!
மதுரையில் சின்னதாக ஒரு இட்லி கடையை நடத்திக் கொண்டிருக்கும் பெரியவர் சிவ நேசன் (ராஜ் கிரண்), அவரது மகன் முருகன் (தனுஷ்). சிறிய வருமானம், சொந்த ஊரிலேயே நிம்மதியான வாழ்வே நிறைவு என நினைக்கும் மனம் சிவ நேசனுக்கு. நிறைய பணம், கார்-பாங்களா, என்ற பெரிய கனவுகள் முருகனுக்கு. சொந்த ஊர், தாய் தந்தையை பிரிந்து, பேங் காங் சென்று விஷ்ணு வர்தன் (சத்யராஜ்) நிறுவனத்தில் வேலைக்கு சேர்க்கிறார். அவரது மகள் மீரா (ஷாலினி பாண்டே) முருகனை காதலிக்க திருமண வேலைகள் பரபரப்பாக நடக்கிறது. எதிர்பாரா விதமாக முருகன் பெற்றோர்கள் இழந்துவிடுகிறார்கள். இறுதி காரியங்கள் செய்ய மதுரை வரும் முருகன் பெற்றோரின் ஆசையை நிறைவேற்றவும், ஊர் மகளின் பிணைப்பை பெறவும் தன் அப்பாவின் இட்லி கடையை மீண்டும் திறக்கிறார்.
திருமணம் நின்றால் அவமானம் ஆகிவிடும் என விஷ்ணு வர்தன், தன் கடைக்கு போட்டி ஆகும் என மாரி (சமுத்திரக்கனி), பெற்றோரை தவிக்க விட்டு சென்றார் என முருகன் மேல், கயல் (நித்யா மேனன்) கோபமாக இருக்கிறார். இவை தாண்டி விஷ்ணு வர்த்தனின் மகன் அஸ்வின் (அருண் விஜய்) - முருகன் இடையே உரசல் ஏற்பட, அது பகையாக மாறுகிறது. முருகன் நினைத்தபடி இட்லி கடையும், ஊர் மக்களும் அவர் வசம் ஆகிறதா, கயலின் கோபம் தீர்ந்ததா? அஸ்வின் பகை முடிந்ததா? என்பதெல்லாம் தான் இட்லி கடையின் மீதிக்கதை.
அன்பால் வளர்க்கப்பட்ட மகனும், வசதியாய் வளர்த்து அடம் பிடிக்கும் மகனுக்குமான மோதலை மையமாக வைத்து கதையை எழுதி இருக்கிறார் தனுஷ். அதில் சொந்த ஊரின் பாசம், ஊர் மக்களின் அன்பு, பெற்றோரை பிள்ளைகள் கவனிக்க வேண்டும், வன்முறை தவறு, அகிம்சை முக்கியம் என்ற கருத்துக்களை முன் வைத்திருக்கிறார்.