வெற்றி - அனிருத் - சிம்பு கூட்டணி.. சம்பவத்திற்கு காத்திருக்கிறதா கோலிவுட்? | Vetrimaaran | STR49
தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் வெற்றிமாறன் - சிம்பு கூட்டணியில் உருவாகும் படம் `STR 49'. இது வடசென்னை 2ம் பாகம் இல்லை, ஆனால் வடசென்னை உலகில் நடக்கும் ஒரு கதை என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரிய அளவில் உண்டாகி இருக்கிறது.
இப்பட அறிவிப்புக்கு பின்பு வெற்றிமாறனின் 50வது பிறந்தநாளான செப் 4ம் தேதி `STR 49' பட ப்ரோமோ டீசர் வெளியிடப்பட்டது. ப்ரோமோவின் டீசரின் மட்டுமே வெளியான நிலையில், முழு ப்ரோமோ அக்டோபர் 4ம் தேதி வெளியாகும் என சமீபத்தில் அறிவித்தார் தாணு. இந்த சூழலில் இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது பற்றிய தகவல்கள் சுற்றி வருகிறது. வழக்கமாக வெற்றிமாறன் படங்கள் என்றால் ஜி வி பிரகாஷ் தான் இசையமைப்பாளராக இருப்பார். ஆனால் STR 49 பொறுத்தவரை அனிருத் இசையமைப்பார் என சொல்லப்படுகிறது.
வெற்றிமாறன் இதுவரை ஜி வி பிரகாஷ் தவிர்த்து சந்தோஷ் நாராயணன், இளையராஜா ஆகிய இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார். ஒருவேளை இந்த செய்தி உண்மையாகும் பட்சத்தில் அனிருத் - வெற்றி கூட்டணி முதல் முறை இணையும். மேலும் பல வருடங்களாக சிம்பு - அனிருத் நல்ல நண்பர்கள் என்றாலும் அவர்கள் எந்தப் படத்திலும் இணைந்து பணியாற்றவில்லை. எனவே சிம்பு - அனிருத் கூட்டணியும் முதன் முறை இப்படத்தில் இணையும். அக்டோபர் 4ல் வர இருக்கும் ப்ரோமோவில் அனிருத் பெயர் இடம்பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.