Couple Friendly
Santosh Soban, Manasa Varanasi Couple Friendly

காதலையும் பிரிவையும் பேசும் `கப்புள் ஃபிரெண்ட்லி' | Couple Friendly Review | Santosh | Manasa

ஒரு காதல் கதை வழியே அழகான தருணங்களை கடத்தவும், பிரிவை பற்றிய உணர்வை கொடுக்கவும் முயன்றிருக்கிறார் இயக்குநர் அஷ்வின் சந்திரசேகர்.
Published on
காதலையும் பிரிவையும் பேசும் `கப்புள் ஃபிரெண்ட்லி' (3 / 5)

காதலும் காதல் நிமித்தமுமாக ஒரு ஜோடிக்கு வரும் சிக்கல்களே Couple Friendly

பெரிய இன்டீரியர் டிசைனர் ஆகும் கனவோடு சென்னை வருகிறார் சிவா (சந்தோஷ் சோபன்), ஐடியில் வேலை தேடி அதே சென்னைக்கு வருகிறார் மித்ரா (மானசா வாரணாசி). வேலை எதுவும் கிடைக்காமல் பைக் டாக்ஸி ஓட்டும் சிவாவும், இண்டர்வூ மேல் இண்டர்வூ சென்றும் பணிக்காக காத்திருக்கும் மித்ராவும் ஒரே வீட்டில் தங்கும் சூழல் உருவாகிறது. சின்ன நட்பாக துவங்கும் உறவு அழுத்தமான காதலாக மாறுகிறது. இன்னொரு புறம் சிவா ஆசைப்பட்டது போல இன்டீரியர் டிசைனராக பெரிய பெயர் எடுக்கிறார். ஆனால் மித்ராவோ துவங்கிய இடத்திலேயே நிற்கிறார். இருவருக்கு நடுவில் சின்னதாக துவங்கும் உரசல், பெரியதாக மாற அதன் பின்னர் என்ன நடக்கிறது என்பதே கதை.

Couple Friendly
Couple Friendly
Couple Friendly
அதிகாரம் பலம் vs அடையாளமற்ற நபர்... சுவாரஸ்யமாக இருக்கிறதா `மை லார்ட்'? | My Lord Review | Sasikumar

ஒரு காதல் கதை வழியே அழகான தருணங்களை கடத்தவும், பிரிவை பற்றிய உணர்வை கொடுக்கவும் முயன்றிருக்கிறார் இயக்குநர் அஷ்வின் சந்திரசேகர்.

நடிகர்களாக சந்தோஷ் சோபன், மானசா இருவரும் மிக அழகான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். பணம் இல்லாமல் சிரமப்படுவது, ஹீரோயினுடன் பழக தடுமாறுவதும், வசதி வந்ததும் ஈகோ காட்டுவது என பல உணர்வுகளை இயல்பாக காட்டுகிறார் சந்தோஷ். மானசா நிதானமான குணத்தையும், உடைந்து போகும் தருணங்களையும் சிறப்பாக வெளிப்படுத்துகிறார். கெஸ்ட்ரோலில் வரும் யோகிபாபு, லிவிங்ஸ்டன் காமெடிகள் அழுத்தமான படத்துக்கு நடுவே சின்ன இளைப்பாரல். அழகான காதல் கதையாக ஆரம்பிக்கும் படம், ஆண் - பெண் சிக்கல், குழந்தை பேரு, சாதிய பாகுபாடு எனப் பல விஷயங்களை அதன் போக்கிலேயே தொட்டு செல்லும் விதம் சிறப்பு. பிடித்த ஒருவர் இன்மையை பற்றி எந்த சோகமும் இன்றி மென்மையாக உணர்த்தும் விதமும் பாராட்ட வேண்டியது.

Couple Friendly
Couple Friendly
Couple Friendly
சூப்பர்ஹீரோவாக எம்.ஜி.ஆர்... என்ன சொல்கிறார் வா வாத்தியார்? | Vaa Vaathiyaar Review

தெலுங்குப் படம் தான் என்றாலும், தமிழ் டப்பிங் மிக கச்சிதமாக செய்யப்பட்டிருந்தது. இந்தப் படம் இன்னும் நெருக்கமாக இருக்க காரணம் பல லைவ் லொகேஷன் காட்சிகள். குறிப்பாக முக்கால்வாசி படத்தில் சென்னை காட்சிகள் தான் நிறைந்துள்ளன. அவை அனைத்தையும் அட்டகாசமாய் பதிவு செய்துள்ளது தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு. ஆதித்யா ரவீந்திரனின் பின்னணி இசையும் பாடல்களும் படத்திற்கு புத்துணர்ச்சியை சேர்க்கிறது. மேலும் படத்தின் மென்மையை தொந்தரவு செய்யாமல் தொகுத்திருக்கிறார் எடிட்டர் கணேஷ் சிவா.

இப்படத்தின் குறைகள் என்றால், முதல் பாதியில் இருக்கும் கச்சிதம், இரண்டாம் பாதியிலும் இருந்திருக்கலாம். இடைவேளைக்கு பிறகான கதை அலைபாய்வதாகவே தோன்றியது. மேலும் ஒரு முக்கிய பாத்திரத்திற்கு வரும் நோய் எல்லாம் பார்த்து பார்த்து சலித்த ஒன்று என்பதால், மிக வழக்கமான ஒன்றாகவே இருந்தது.

இது போல சில குறைகள் கடந்து, ஒரு இதமான படத்தை பார்த்த உணர்வையே தருகிறது இந்த `Couple Friendly'

Couple Friendly
எமோஷனலான குடும்பப் படமாக கவர்கிறதா `மெல்லிசை'? | Mellisai Review | Kishore Kumar
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com