\
Mohanlal
Mohanlal Mohanlal's instagram

மோகன்லால் காட்சிகள் நீக்கம்…! வெடித்த சர்ச்சை!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ படத்தில், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் காட்சிகள் நீக்கப்பட்டதாகக் கூறி, அவரது ஆடை வடிவமைப்பாளர் ஜிஷாத் ஷம்சுதீன் படக்குழுவை விமர்சித்துள்ளார்.
Published on: 

செய்தியாளர் - M. மீரா

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ படத்தில், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் காட்சிகள் நீக்கப்பட்டதாகக் கூறி, அவரது ஆடை வடிவமைப்பாளர் ஜிஷாத் ஷம்சுதீன் படக்குழுவை விமர்சித்துள்ளார். மேலும், அடுத்த பாகமான ‘ஜெயிலர் 3’ உருவானால் அதில் பணியாற்ற மாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தப் பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ முதல் பாகத்தில் மோகன்லால் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். அவரது மேத்யூ கதாபாத்திரம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இதேபோல், ‘ஜெயிலர் 2’ படத்திலும் அவர் சில நிமிடங்கள் மட்டுமே திரையில் தோன்றுவதாகக் கூறப்படுகிறது.

Jailer 2 last schedule started
Jailer 2

இந்நிலையில், மோகன்லாலுக்காக வடிவமைத்த ஆடைகள் மற்றும் வெவ்வேறு தோற்றங்கள் தொடர்பான புகைப்படங்களை ஆடை வடிவமைப்பாளர் ஜிஷாத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், படப்பிடிப்பின்போது மோகன்லாலுக்காக மூன்று விதமான தோற்றங்களை உருவாக்கியதாகவும், ஆனால் படம் வெளியானபோது அந்த மூன்று தோற்றங்களும் முழுமையாக நீக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், டிரெய்லரில் இடம்பெற்றிருந்த காட்சியும் படத்தில் நீக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், மோகன்லால் போன்ற ஒரு சூப்பர் ஸ்டார் நடித்த காட்சிகளை நீக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும், பணம், லாபம் அல்லது நட்சத்திர அந்தஸ்துக்காகத் தான் நிற்கவில்லை என்றும், ரசிகர்களுக்காகவும் கலையின் மீதான அன்புக்காகவும் மோகன்லாலுக்காகவும் நிற்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, ‘ஜெயிலர் 3’ திரைப்படம் உருவானால் அதில் தான் பங்கேற்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார். இந்தப் பதிவு வெளியானதைத் தொடர்ந்து, மோகன்லால் ரசிகர்கள் பலரும் ஆடை வடிவமைப்பாளரின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Mohanlal
எப்படி இருக்கிறது சூப்பர் ஸ்டாரின் `ஜெயிலர் 2’ | Jailer 2 Review
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com