மோகன்லால் மம்மூட்டி இணைந்து நடித்துள்ள Patriot ட்ரெய்லர் வெளியீடு! | Mohanlal | Mammootty
மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார்களான மோகன்லால், மம்மூட்டி இணைந்து நடித்துள்ள மகேஷ் நாராயணன் இயக்கம் ‘Patriot’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது. 2008ல் வெளியான ‘Twenty:20’க்கு பிறகு 17 ஆண்டுகள் கழித்து இருவரும் மீண்டும் ஒன்றாக திரையில் வருவது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. ஸ்பை த்ரில்லர் வகையில் உருவான இப்படம் மே 1ம் தேதி வெளியாகிறது.
மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்கள் மோகன்லால் - மம்மூட்டி. இருவரும் இப்போது பெரிய நட்சத்திரங்களாக தனித்தனியாக பல ப படங்களில் நடித்துள்ளனர். ஆரம்ப கால கட்டடங்களில் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். சில வருடங்களாக இணைந்து நடிக்காமலிருந்த இந்த இருவரும் மீண்டும் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் `Patriot' படம் மூலம் ஒன்றாக திரையில் தோன்ற உள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
2008ல் வெளியான `Twenty:20' படத்திற்கு பிறகு இணைந்து நடிக்காமலிருந்த மோகன்லால் - மம்மூட்டி கிட்டத்தட்ட 17 வருடங்களுக்கு பிறகு இணைந்து இப்படத்தில் நடித்துள்ளனர். இதில் ஃபகத் பாசில், குஞ்சாக்கோ போபன், நயன்தாரா, ரேவதி, ராஜீவ் மேனன், தர்ஷனா, ஸரீன், கிரேஸ் ஆண்டனி, டேனிஷ், இந்த்ரன்ஸ், ரெஞ்சி பணிக்கர் எனப் பலரும் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு அக்டோபர் 2ம் தேதி வெளியான நிலையில், இன்று படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ஸ்பை த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படம் மே 1ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

