\
Minister Vanni Arasu Praises Dorothy Team, Requests Part 2
வன்னி அரசு - கார்த்திக் சுப்புராஜ்Pt web

”டோரதி பார்ட் 2 எடுங்க” கார்த்திக் சுப்புராஜிடம் அமைச்சர் வன்னி அரசு கோரிக்கை!!

டோரதி படக் குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய அமைச்சர் வன்னி அரசு, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜிடம் இப்படத்தின் பார்ட் 2 எடுக்கும்படி கோரிக்கை வைத்துள்ளார்.
Published on: 

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் ‘டோரதி'. இப்படம், ஆண் திருநங்கையாக மாறும் போது குடும்ப சூழல், சமூகத்தால் எப்படி பாதிப்பிற்குள்ளாகிறாள், இச்சமூகம் எப்படி பார்க்கிறது என்பதை உண்மைக்கு நெருக்கமாக பேசியிருந்தது. ஒருபக்கம் இந்தப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துவரும் நிலையில், மறுபக்கம் படத்தில் இடம்பெற்ற முத்தக்காட்சியும், ஆண் நண்பர்கள் இருவர் திருமணம் செய்து கொண்டதும் பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில், நடைபெற்ற யூடியூப் விவாதத்தில் பேசியிருந்த இயக்குநர் மோகன் ஜி, டோரதி படத்திற்கு பார்ட் 2 எடுத்தால் என்ன காட்டுவீர்கள் என்ற வகையில் பேசியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

மோகன் ஜி - கார்த்திக் சுப்புராஜ்
மோகன் ஜி - கார்த்திக் சுப்புராஜ்kumudham show / karthik subbaraj x

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜும் மோகன் ஜி-ன் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்தச்சூழலில் தான், அமைச்சர் வன்னி அரசு, இன்று டோரதி படக்குழுவினரை தலைமைச் செயலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். அப்போது, அமைச்சர் வன்னி அரசு, ’டோரதி பார்ட் 2’ எடுங்கள் என இயக்குநர் கார்த்திக் சுப்புராஜிடம் கலகலப்பாக கூறியது கவனம் பெற்றுள்ளது. அதற்கு பதிலளித்த கார்த்திக் சுப்புராஜ், ”கண்டிப்பாக” என சிரித்துக் கொண்டே பதிலளித்துள்ளார். தொடர்ந்து, இருவரும் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினர்.

செய்தியாளர்களிடம் அமைச்சர் வன்னி அரசு பேசுகையில், ”டோரதி படம் சமூக கட்டமைப்பில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். சாதிய கட்டமைப்பை உடைக்க வேண்டும் என்று இயக்குனர்கள் நிறைய பேர் வந்துள்ளது மகிழ்ச்சி. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்-க்கு வாழ்த்துகள். திருநங்கைகள் எப்படி புறக்கணிப்படுகிறார்கள். துன்புறுத்தப்படுகிறார்கள் என பார்க்கிறோம். திருநங்கைகள் மனித சமூகத்தில் ஒரு அங்கம் என அங்கீகாரம் செய்யப்படவில்லை. டோரதி திரைப்படம் திருநங்கையருக்கான புதிய மலர்வை உருவாக்கி உள்ளது. இது போன்ற படைப்புகள் நிறைய வர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

வன்னி அரசு - கார்த்திக் சுப்புராஜ்
வன்னி அரசு - கார்த்திக் சுப்புராஜ்Pt web

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில், ”மக்கள் டோரதி படத்தை திரையரங்கில் கொண்டாட ஆரம்பித்தார்கள். சமூகத்தில் சிறிய மாற்றம் உருவாகி உள்ளது என்று மக்கள் சொன்னார்கள். இப்போது அமைச்சர் வன்னி அரசு பாராட்டியது மகிழ்ச்சி” எனத் தெரிவித்துள்ளார்.

Minister Vanni Arasu Praises Dorothy Team, Requests Part 2
மனிதனின் ஒரே நோக்கம் அதுதானா..? மோகன் ஜி-க்கு கார்த்திக் சுப்புராஜ் கண்டனம்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com