Michael GambonFile image
சினிமா
ஹாரிபாட்டர் படங்களில் Professor Albus Dumbledore-ஆக நடித்த மைக்கேல் கேம்பன் காலமானார்!
ஹாரிபாட்டர் படங்களில் நடித்த நடிகர் மைக்கேல் கேம்பன் நிமோனியா பாதிப்பால் உயிரிழந்தார்.
ஐரிஸ் நடிகரான மைக்கேல் கேம்பன் (82), 8 பாகங்களைக் கொண்ட ஹாரிபாட்டர் படத்தில் முதல் 6 பாகங்களில் ப்ரொபசர் ஆல்பஸ்டம் பில்டோர் (Professor Albus Dumbledore) என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றவர்.
Michael Gambonpt desk
மேலும் தி ஓமன், தி லாஸ்ட் செப்டம்பர், சர்ச்சில்ஸ் சீக்ரெட் உள்ளிட்ட ஐம்பதிற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.
Harry potter Michael Gambonpt desk
இந்நிலையில் நிமோனியாவால் பாதிக்கப்பட்டிருந்த இவர், இன்று உயிரிழந்தார். சுமார் ஐந்து தசாப்தங்கள் நீடித்த இவரது சினிமா பயணத்தில், நான்கு முறை பிரிட்டிஷ் அகாடமி விருது வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.