“உங்களுக்கு ஏதோ பெரிய பிரச்னை”: ட்விட்டரில் இயக்குநர் - மீரா மிதுன் கடுமையாக மோதல்..!

“உங்களுக்கு ஏதோ பெரிய பிரச்னை”: ட்விட்டரில் இயக்குநர் - மீரா மிதுன் கடுமையாக மோதல்..!
“உங்களுக்கு ஏதோ பெரிய பிரச்னை”: ட்விட்டரில் இயக்குநர் - மீரா மிதுன் கடுமையாக மோதல்..!

விஜய் ஆண்டனி, அருண் விஜய் இணைந்து நடிக்கும் ‘அக்னி சிறகுகள்’ திரைப்படத்தை ‘மூடர் கூடம்’ படத்தை இயக்கிய
நவீன் இயக்குகிறார். ஆக்‌ஷன், திரில்லராக உருவாகும் இப்படத்தில் அக்‌ஷரா ஹாசன், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய
கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் முடிந்தது. தற்போது அடுத்த கட்ட
படப்பிடிப்பிற்காக படக்குழு ரஷ்யா சென்றுள்ளது.

இந்நிலையில், இயக்குநர் நவீன் தனது ட்விட்டர் பக்கத்தில், “’அக்னிச் சிறகுகள்’ படத்தில் ஷாலினி பாண்டேவுக்கு பதிலாகத்
தான் அக்‌ஷரா ஹாசன் நடிக்கிறார். அவர் தான் முதன்மை நாயகி. மீரா மிதுன் முதன்மை நாயகியாக ஒப்பந்தம்
செய்யப்படவில்லை. எனக்குத் தெரியாமலேயே பத்திரிகைகளில் தான் படத்தில் இருப்பதாகச் சொல்லி வருகிறார். முதலில்
இதை ஒரு விவகாரமாக்க நான் விரும்பவில்லை. ஆனால் இப்போது...." என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த மீரா மிதுன், உங்களுக்கு இந்தப் பேட்டி ஞாபகம் இருக்கிறதா? என ஒரு நியூஸ் புகைப்படத்தை
வெளியிட்டார். மேலும், “இந்த விவகாரத்தில் ஊடகமும் பொய் சொல்கிறது என்கிறீர்களா. ஏஞ்சலினா ஜோலி போல நடிப்பதற்கு
சில காட்சிகளை என்னிடம் காட்டி பேசினீர்கள். உங்களுக்கு அது மறந்துவிட்டால், நான் சொல்லட்டுமா இயக்குநர் நவீன் சார்.

தொடர்ச்சியாக இவ்வாறு பொய் சொல்லிக் கொண்டே இருந்தீர்கள் என்றால், இது தொடர்பாக வீடியோ ஆதாரமும் என்னிடம்
உள்ளது. அதை ஊடகத்திடம் வெளிப்படுத்துவேன். அம்மா கிரியேஷன்ஸ் சிவா தான் என்னை இந்தப் படத்துக்கு ஒப்பந்தம்
செய்து, உங்களைச் சந்திக்கச் சொன்னார். நீங்கள் ஒரு பெரிய பொய்யர். ஒரு ஆணாக உண்மையைப் பேசுங்கள். அல்லது
உங்களுக்கு ஞாபக மறதி நோய் இருக்கிறதா..? நல்ல ஒரு மனநல மருத்துவரைப் பாருங்கள்” எனத் தெரிவித்தார். 

இதற்கு மீண்டும் பதிலடி கொடுக்கும் வகையில், இயக்குநர் நவீன், “ஆணாக இருப்பதைப் பெருமையாக நினைத்துக் கொள்ளும்
ஆள் நான் இல்லை. பெண்ணாக எனது அம்மா, அக்கா, மனைவி அனைவருமே என்னை விடத் துணிச்சல் மிக்கவர்கள்.
உங்களுக்கு ஏதோ பெரிய பிரச்னை மீரா. தயவு செய்து மருத்துவரைப் பாருங்கள். இது தான் உங்களுடைய முட்டாள்தனமான
ட்வீட்களுக்கு, நான் அளிக்கும் கடைசி பதில்" எனக் குறிப்பிட்டார். 

இதற்கு பதிலளித்த மீராமிதுன், "வார்த்தைகளில் கவனம். ஒரு பெண்ணை மருத்துவரைச் சென்று பார்க்கச் சொல்ல உங்களுக்கு
யார் அதிகாரம் கொடுத்தது. உங்களுக்கும் எனக்கும் நடந்த படம் தொடர்பான உரையாடல்களை வெளியிட்டால் உங்களுக்கு
மட்டுமல்ல, உங்கள் குடும்பப் பெண்களையும் பாதிக்கும். வெளியிடட்டுமா? அதை எதிர்கொள்ள உங்களுக்குத் துணிச்சல்
இருக்கிறதா?" என்று தெரிவித்தார்.

மேலும் மற்றொரு ட்விட்டில் “என்னாச்சு, ஏன் அமைதியாக இருக்கிறீர்கள். சவாலுக்கு தயாரா?” எனவும் மீராமிதுன் கேள்வி
எழுப்பியுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com