’மாஸ்டர்’ திரையரங்க டிக்கெட் கவுண்டர்களில் முண்டியடித்த கூட்டம்

’மாஸ்டர்’ திரையரங்க டிக்கெட் கவுண்டர்களில் முண்டியடித்த கூட்டம்

’மாஸ்டர்’ திரையரங்க டிக்கெட் கவுண்டர்களில் முண்டியடித்த கூட்டம்
Published on

பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் 'மாஸ்டர்' திரைப்படத்தைக் காண, விஜய்யின் ரசிகர்கள் திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவுக்காக முண்டியடித்தனர்.

'மாஸ்டர்' திரைப்படத்தைக் காண கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து காத்திருக்கும் ரசிகர்கள், தற்போது ஜனவரி 13 ஆம் தேதியை எதிர்நோக்கியுள்ளனர். 'மாஸ்டர்' திரைப்படத்துக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிட்டதால், டிக்கெட்டுகளைப் பெற்றிட அவர்கள், கவுண்டர்களில் முண்டியடித்து வருகின்றனர்.

50 சதவிகித இருக்கைகளுடன் மட்டுமே திரையரங்குகள் இயங்கும் என்பதால், கவுண்டர்களில் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. சென்னையில் 'மாஸ்டர்' திரையிட உள்ள திரையரங்குகளில் இன்று ரசிகர்கள் தேனீக்கள்போல கவுண்டர்களை மொய்த்தனர். இதனால் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறையான தனிமனித இடைவெளி காற்றில் பறந்தது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com