\
இளையராஜா - டோரதி படக்குழு
இளையராஜா - டோரதி படக்குழுkarthik subbaraj - X

மாபெரும் வெற்றிபெற்ற ’டோரதி’.. இளையராஜாவிற்கு மரியாதை செய்த படக்குழு!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் திரைப்படம் டோரதி.
Published on: 
Summary

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த 'டோரதி' திரைப்படம் மூன்றாம் பாலினத்தவர்களின் சமூக சிக்கல்களை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தி மாபெரும் வெற்றிபெற்றது. படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த இளையராஜாவிற்கு படக்குழு மரியாதை செய்து கேக் வெட்டி கொண்டாடியது.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் ‘டோரதி (Dorothy). கீர்த்தி சுரேஷ், சனந்த் மற்றும் ரிஷிகாந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் சிக்யா என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு, இளையராஜா இசையமைத்துள்ளார்.

Dorothy Team Provides Aid to 25 Transgender People from Film Profits
dorothydorothy

கடந்த 25ஆம் தேதி வெளியான டோரதி திரைப்படம், ஆண் திருநங்கையாக மாறும் போது குடும்ப சூழல், சமூகத்தால் எப்படி பாதிப்பிற்குள்ளாகிறாள், இச்சமூகம் எப்படி பார்க்கிறது என்பதை உண்மைக்கு நெருக்கமாக பேசும் படமாக அமைந்திருந்தது. படம் உருவாக்கப்பட்ட விதம், படத்தொகுப்பு, கேமரா ஒர்க் என அனைவரும் தங்களுடைய சிறந்த வேலையை கொடுத்திருந்த நிலையில், அனைத்தையும் தூக்கிக்கொண்டு உச்சத்தில் வைக்கும்வகையில் இளையராஜாவின் இசை பெரிய பலமாக அமைந்திருந்தது. பல காட்சிகளில் படத்தின் உயிரோட்டத்தை மேலும் மெருகேற்றியது இளையாராஜாவின் இசை தான், அதிலும் படத்தின் கிளைமேக்ஸில் வைக்கப்பட்ட முத்துமணி பாடல் காண்போருக்கு மன நெகிழ்வை கொடுக்கும்விதமாக அமைந்திருந்தது.

இந்தசூழலில் தான் படத்தின் வெற்றிக்கு பெரிய பலமாக இருந்த இளையராஜாவிற்கு, மாலை அணிவித்து மரியாதை செய்ததோடு, கேக் வெட்டியும் கொண்டாடியுள்ளது படக்குழு. எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருக்கும் கார்த்திக் சுப்புராஜ், “#டொரோத்தியின் வெற்றியை சாத்தியமாக்கிய ஜாம்பவானுடன் கொண்டாடுகிறோம். எல்லாவற்றிற்கும் நன்றி மாஸ்ட்ரோ இலையராஜா சார்” என பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இளையராஜாவின் காலில் விழுந்து கார்த்திக் சுப்புராஜ் ஆசீர்வாதம் பெற, நிறைய வெற்றி படங்களை கொடுக்க வேண்டும் என ராஜாவும் ஆசீர்வதிக்கிறார். இந்த நிகழ்பு பார்ப்பதற்கே அற்புதமாக இருப்பதாக ராஜாவின் ரசிகர்கள் கருத்திட்டு வருகின்றனர்.

இளையராஜா - டோரதி படக்குழு
TRENDING Playlist-ல் இளையராஜா: Gen Z-யை ஈர்க்கும் இசை! தலைமுறை கடந்து ஆதிக்கம்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com