\
Avengers endgame
Avengers endgame Reuters

மீண்டும் திரைக்கு வரும் ’Avengers: Endgame’.. Marvel ரசிகர்களுக்கு செம Surprise! என்ன ஸ்பெஷல்?

2019-ல் பார்த்த ‘Endgame’தான் என்றாலும், இந்த முறை திரையரங்கில் ரசிகர்களுக்காக காத்திருப்பது பழைய நினைவுகள் மட்டுமல்ல.. புதிய Marvel தகவல்களும்தான்!
Published on
Summary

மார்வெல் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த Avengers: Endgame திரைப்படம், ‘Endgame Encore’ என்ற பெயரில் 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரையரங்குகளில் வருகிறது. செப்டம்பர் 25 முதல் இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கில் வெளியான இந்த பதிப்பில் கூடுதல் காட்சிகள், Time Heist நினைவூட்டல்கள், Infinity Stones விளக்கங்கள், மேலும் அடுத்த படமான Avengers: Doomsday-க்கான பிரத்யேக First Look போன்ற சர்ப்ரைஸ்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

செய்தியாளர் - M. மீரா

மார்வெல் ரசிகர்களால் மறக்க முடியாத திரைப்படங்களில் ஒன்றான Avengers: Endgame, 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது. Avengers: Endgame Encore என்ற பெயரில் வெளியாகும் இந்த சிறப்புத் திரைப்படம், செப்டம்பர் 25 முதல் இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.

2019-ல் வெளியான படத்துடன் ஒப்பிடும்போது, இந்த முறை கூடுதல் காட்சிகளும், அடுத்த ‘Avengers’ திரைப்படமான Avengers: Doomsday குறித்த பிரத்யேக காட்சியும் இடம்பெறுகிறது.

இந்த முறை ரசிகர்களுக்கு மற்றொரு சுவாரஸ்யமும் காத்திருக்கிறது. AMC Theatres வெளியிட்டுள்ள தகவலின்படி, ‘Endgame Encore’ படத்தின் ரன்டைம் 185 நிமிடங்கள், அதாவது 3 மணி நேரம் 5 நிமிடங்கள். ஆனால், 2019-ல் வெளியான அசல் திரையரங்கப் பதிப்பின் ரன்டைம் 181 நிமிடங்கள். இதனால் புதிய பதிப்பில் சுமார் 4 நிமிடங்கள் கூடுதல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த கூடுதல் நேரத்தில் என்ன இருக்கிறது என்பதை மார்வெல் இதுவரை அதிகாரப்பூர்வமாக முழுமையாக வெளியிடவில்லை. எனினும், தகவல்களின்படி, திரைப்படம் புதிதாக உருவாக்கப்பட்ட அறிமுகக் காட்சியுடன் தொடங்கும் என கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அசல் திரையரங்கப் பதிப்பில் இடம்பெறாத சில புதிய காட்சிகளும் இடம்பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், படத்தின் போஸ்ட்-கிரெடிட்ஸ் பகுதியில் புதிய காட்சி ஒன்றும் இடம்பெற இருப்பதாக கூறப்படுகிறது. இது 2026 டிசம்பரில் வெளியாக உள்ள ‘Avengers: Doomsday’ திரைப்படத்துடன் ‘Endgame’ கதையை இணைக்கும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், ‘Endgame Encore’ வெறும் மறுவெளியீடாக இல்லாமல், அடுத்த Avengers திரைப்படத்திற்கான முக்கிய முன்னோட்டமாகவும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Avengers endgame
ஒரே மாதத்தில் ரூ.800 கோடி வசூல்.. முதல் தென்னிந்திய நடிகை மமிதா பைஜு! உச்சகட்ட சாதனை!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com