லியோ உடன் மோதும் பாரதிராஜா படம்.. வெளியிட்டு தேதி அறிவிப்பு

நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் வெளியான அடுத்த நாள் மனோஜ் பாரதிராஜாவின் மார்கழி திங்கள் திரைப்படம் வெளியாக உள்ளது.
மார்கழி திங்கள், லியோ
மார்கழி திங்கள், லியோpt web

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. மாஸ்டர் திரைப்படத்திற்கு பின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய் மீண்டும் இணைந்துள்ளனர்.

லியோ
லியோ முகநூல்

இத்திரைப்படத்தில் நடிகை த்ரிஷா, நடிகர்கள் அர்ஜூன், சஞ்சய் தத் எனப் பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையில் உருவான திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்திரைப்படம் தொடர்பான புகைப்படங்களும் அடிக்கடி வெளியாகி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

படத்திற்கான இசை வெளியீட்டு விழா பல்வேறு காரணங்களால் ரத்தானது. என்றபோதும் படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. நாளை ட்ரெய்லர் வெளியாகவுள்ள நிலையில் லியோ படத்தில் அர்ஜூன் கதாபாத்திரத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

மறுபுறம் இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் பாரதிராஜா இயக்கியுள்ள மார்கழித் திங்கள் திரைப்படம் அக்டோபர் 20 ஆம் தேதி வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் இயக்குநர் பாரதிராஜா மற்றும் இயக்குநர் சுசீந்திரன் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் மூலம் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள மார்கழி திங்கள் திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

லியோ திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகுமென்ற நிலையில் மார்கழித் திங்கள் திரைப்படம் அக்டோபர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனால், லியோ திரைப்படம் சோலோவா வெளியாகவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com